திருநெல்வேலி கடந்தா வசந்த் அண்ட்கோ தமிழ்நாடுதானா அண்ணாச்சி..?: ஜிப்ஸி படம் சொல்லும் உண்மை..!

By Vishnu PriyaFirst Published Sep 11, 2019, 6:16 PM IST
Highlights

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் என் குடும்பத்தினர் யாருக்கும் சீட் கேட்கப்போவதில்லை. அங்கே எம்.எல்.ஏ.வாக நான் ஏற்கனவே பெற்றிருந்த வெற்றியானது தனித்த கை சின்னத்தின் வெற்றி இல்லை.

* எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் நடவடிக்கை எடுப்பேன். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள்: தினகரன். (அண்ணே புகழேந்தி மேட்டரை சொல்லுறீங்கன்னு புரியுது. ஆனா நீங்க விரைந்து நடவடிக்கை எடுக்குறதுக்குள்ளே கட்சியே கரைஞ்சு போயிடும் போலிருக்குதே!)

* திருப்பூரில் நடைபெறும் முப்பெரும் விழா செலவுகளுக்கு தலைமையில் மிக சொற்பமான தொகையைதான் கொடுத்தார்கள். ஏற்கனவே சம்பாத்தியம் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் நாங்கள் எப்படி இந்த விழாவை பெரிதாய் நடத்துவது என தெரியவில்லை: தே.மு.தி.க. நிர்வாகிகள். (க்கும், இன்னைக்கு புலம்பி என்ன பிரயோசனம்? அன்னைக்கு உங்க கட்சிக்கு செல்வாக்கு இருக்குற நிலை இருந்தப்ப நீங்களெல்லாம் ஆடுன ஆட்டம் கொஞ்சநஞ்சமா? போட்டோ எடுக்க வந்த பத்திரிக்கைக்காரனை கேமெராவ திருக்கி அனுப்புனதோட பலன்...)

* செந்தில் பாலாஜி தனது இடைத்தேர்தல் பிரசாரத்தில் தந்த உறுதிமொழியான ‘வீடில்லாத அனைவருக்கும் மூன்று சென்ட் இலவச நிலம் தருவேன்’ எனும் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு சிக்கல்தான்: செய்தி (பாஸு செந்தில்பாலாஜியை அவ்ளோ சாதாரணமாவா எடை போட்டுட்டீங்க. அவரு இதுக்கு பதில் சொல்வார். எப்படி தெரியுமா? ‘வீடு இல்லாதவங்களுக்கு வீடு தர்றேன்னு சொன்னேன் உண்மைதான். சொந்த வீடுன்னு சொன்னேனா? வாடகை வீடோ, ஒண்டிட குடிசையோ கூட இல்லாம, ரோட்டுல உக்காந்திருக்கிறவங்களை காட்டுங்க, இலவச நிலம் தர்றேன்’ன்னு சொல்வார். அப்புறம் என்ன பண்ணுவீங்க?)

* இந்த தேசத்தில் கருத்துரிமை மறுக்கப்படுகிறது. என்ன பேசினாலும் இந்துத்வத்துக்கு எதிரானது என்று சொல்லி முடக்குகிறார்கள். ஜிப்ஸி படத்தில் வரும் காட்சிகள் சிலதை ‘இந்துக்களை புண் படுத்துகிறது, உ.பி. முதல்வரை கிண்டலடித்து நேரடி காட்சி உள்ளது.’ என்று சொல்லி தணிக்கை சான்று தர மறுக்கிறார்கள்: உணர்வாளர்கள் குரல். (அவங்க அப்படி பாரபட்சமா நடந்துக்குறாங்கன்னு நீங்க சொல்றீங்க. அதேமாதிரி உணர்வாளர்களும் ‘இந்து சமயம்’ அப்படிங்கிற ஒரே இலக்கை குறிபார்த்து குதறி எடுக்கும் வேலைகளை மட்டும்தானே பண்றீங்க. நம்பிக்கை, சம்பிரதாயம், பரிகாரம் அதுயிதுன்னு மற்ற மதங்களில் இருக்கிறதை நீங்க சீண்டுறதில்லையே. நீங்களும் பாரபட்சமான பேர்வழிகள்தானே அந்த வகையில்)

* நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் நான் என் குடும்பத்தினர் யாருக்கும் சீட் கேட்கப்போவதில்லை. அங்கே எம்.எல்.ஏ.வாக நான் ஏற்கனவே பெற்றிருந்த வெற்றியானது தனித்த கை சின்னத்தின் வெற்றி இல்லை. அதில் தி.மு.க.வின் பெரும் பங்கும் இருக்கிறது: வசந்தகுமார்
(ஓஹோ!  ஏற்கனவே கன்னியாகுமரியில நீங்க எம்.பி. இதுல நாங்குநேரியில வேற உங்க குடும்பத்துல ஒருத்தருக்கு எம்.எல்.ஏ. சீட் கேட்குற பேச்சு வேற ஓடுச்சா?! அண்ணே என்னண்ணே இது? இனி திருநெல்வேலி தாண்டி கன்னியாகுமரி முழுக்க ’அந்த ஏரியா அது அது அது வசந்த குமார் ஏரியா’ன்னு உங்க கம்பெனி விளம்பரம் மாதிரி பாட வெச்சிடுவீங்க போல!)

click me!