
‘நான் நன்கு வளர்ந்த சுயமுடிவுகள் எடுக்கத்தெரிந்த பெண். நான் என்ன விதமாய் ஆடை அணியவேண்டுமென்பதிலெல்லாம் என் அப்பா ஏ.ஆர்.ரஹ்மான் தலையிடுவதில்லை’ என்று மிகவேகமாக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகளுக்கு அவசர அவசரமாக பதில் அளித்திருக்கிறார் கதீஜா ரஹ்மான்.
அதற்கு பதிலளித்து தனது குடும்பத்தினருடன் ஒரு ட்வீட் போட்ட ரஹ்மான் ’ஃப்ரீடம் டு சூஸ்’ என்ற ஹேஸ்டேக்குடன் தனது இளைய மகளும் மனைவியும் புர்கா அணியாமல் நீது அம்பானியுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அப்போதும் சர்ச்சைகள் ஓயவில்லை.
அதை ஒட்டி சற்றுமுன்னர் நீண்ட பதிவுடன் ஒரு விளக்கம் வெளியிட்டிருக்கும் ரஹ்மானின் மகள்,’ புர்கா அணிந்து அந்த மேடையில் தோன்றவேண்டும் என்பது முழுக்க முழுக்க சுய நினைவுடன், மிகுந்த விருப்பத்துடன் நான் எடுத்த முடிவு. என் ஆடை என் உரிமை. இது குறித்து விமர்சிக்கவோ அப்பாவை இந்த சர்ச்சையில் இழுத்து விடுவதையோ நான் கொஞ்சமும் விரும்பவில்லை. தயவு செய்து சூழ்நிலையைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்ற செய்தியுடன் ரஹ்மான் போட்ட ’ஃப்ரீடம் டு சூஸ்' என்ற அதே ஹேஸ்டேக்கையே இணைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.