
சின்னதம்பி யானையை காட்டில் இருக்கும் அதனுடைய குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்று நடிகர் பிரபு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்... "விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த 'கும்கி' படத்தின் இசை வெளியீட்டு விழா விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
அந்த விழாவில் ஒரு தந்தம் ரஜினி, இன்னொரு தந்தம் கமல் என்றும் அந்த தந்தத்தில் விக்ரம் பிரபு ஏறிக் கொண்டு இருக்கிறார் எனறும் பேசினார்கள். அந்த வார்த்தைகள் உண்மையில் மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.
எனக்கு மட்டுமின்றி எல்லோருக்கும் விநாயகர்தான் இஷ்ட தெய்வம். அதனால் கும்கி யானை, சின்னத்தம்பி யானையை துரத்தாமல் அதோடு நட்பாகி இருக்கிறது என்று கேள்விப்பட்ட போது மகிழ்ச்சியாக உள்ளது. சின்னதம்பி யானையால் யாருடைய உயிருக்கும் சேதம் இல்லை என்று நான் கேள்விப்பட்டேன். அதிகாரிகளும் சின்னதம்பி யானை சாதுவாக உள்ளது. அது தாக்காது என்று கூறினார்கள். எனவே சின்னதம்பி யானையை வனத்தில் உள்ள அதன் குடும்பத்தோடு சேர்த்து விடுவது நல்லது என்று கருதுகிறேன்.
எனவே சின்னத்தம்பி யானை இருந்த இடத்திற்கு அனுப்பி விட்டால் சந்தோஷப்படுவேன் அதுதான் என்னுடைய உருக்கமான வேண்டுகோள் என்று கூறியுள்ளார். மேலும் சமூக வலைத்தளத்திலும் பலர் சின்னத்தம்பியை அதன் குடும்பத்துடன் சேர்ந்து விட வேண்டும் என கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.