கடும் கொலவெறியுடன் செல்ஃபி எடுத்தவரின் போனை மீண்டும் தட்டி விட்ட ‘யோகா’ சிவக்குமார்...

Published : Feb 07, 2019, 11:41 AM IST
கடும் கொலவெறியுடன் செல்ஃபி எடுத்தவரின் போனை மீண்டும் தட்டி விட்ட ‘யோகா’ சிவக்குமார்...

சுருக்கம்

வருஷக் கணக்குல யோகா பண்ணி என்ன பிரயோஜனம். செல்ஃபி எடுக்கிற ஒரு பையன்கிட்ட பொறுமையா நடந்துக்காம இவ்வளவு அசிங்கப்படலாமா என்று சில வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் வலைதளங்களில் கழுவிக் கழுவு கழுவில் ஏற்றப்பட்ட நடிகர் சிவகுமார் நேற்று முன் தினம் நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் அதையும் விட கேவலமாக இன்னொருவரின் செல்ஃபோனைத் தட்டிவிட்டு மீண்டும் தன் மானத்தைக் காற்றில் பறக்கவீடிருக்கிறார்.


வருஷக் கணக்குல யோகா பண்ணி என்ன பிரயோஜனம். செல்ஃபி எடுக்கிற ஒரு பையன்கிட்ட பொறுமையா நடந்துக்காம இவ்வளவு அசிங்கப்படலாமா என்று சில வாரங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தில் வலைதளங்களில் கழுவிக் கழுவு கழுவில் ஏற்றப்பட்ட நடிகர் சிவகுமார் நேற்று முன் தினம் நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் அதையும் விட கேவலமாக இன்னொருவரின் செல்ஃபோனைத் தட்டிவிட்டு மீண்டும் தன் மானத்தைக் காற்றில் பறக்கவிட்டிருக்கிறார்.

இயக்குநர் - எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ் - திலகவதி  அவர்கள் மகன் இராம பாண்டியனுக்கும், பிரபாகரன் - காஞ்சனமாலா தம்பதியின் மகள்  ஐஸ்வர்யாவிற்கும் பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் கிழமைமாலை 6.30 க்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ராமாபுரம் எம். ஜி. ஆர். தோட்டம் அருகில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

 இயக்குநர்கள்  எஸ் பி முத்துராமன், ஆர் கே செல்வமணி, லிங்குசாமி, மோகன் ராஜா, மனோஜ் குமார், சேரன், சமுத்திரகனி, ஆர் வி உதயகுமார், விக்ரமன், பொன்வண்ணன், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் சிவகுமார், கவுண்டமணி, மயில்சாமி, கோவை சரளா, ராதாரவி, நரேன், சாம்ஸ், மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா, குட்டி பத்மினி, கஸ்தூரி, டெல்லி கணேஷ், வை ஜி மகேந்திரன், எஸ் வி சேகர், போண்டாமணி, நெல்லை சிவா,
 இசையமைப்பாளர்கள் எஸ் ஏ ராஜ்குமார், தேவா,  எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவி பாலா, நாக் ஸ்டூடியோ கல்யாணம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவுக்கு வருகை தந்த நடிகர் சிவகுமார் மணமக்களை வாழ்த்துவதற்காக மண்டபத்துக்குள் நுழைந்தபோது இளைஞர் ஒருவர் சிவகுமாரை சற்றும் தொந்தரவு செய்யாமல் ஒரு செல்ஃபி எடுக்கமுயன்றார். உடனே கடும்கோபத்துக்கு ஆளான சிவக்குமார் அதை ஓங்கித் தட்டிவிடுகிறார். சுமார் 9 விநாடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறார்.

செல்ஃபோன் தட்டிவிடப்பட்டவர் சூர்யா அல்லது கார்த்தியிடமிருந்து புது ஆண்ட்ராய்டு போனுக்காக காத்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!