AR Rahman Acapella song : இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இசைக்கருவிகளே இல்லாமல் கம்போஸ் செய்த மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு சொத்து என்றே ஏ.ஆர்.ரகுமானை சொல்லலாம். ஏனெனில் இளையராஜா இல்லாவிட்டால் படமே இல்லை என்றிருந்த காலகட்டத்தில் இயக்குனர் பாலச்சந்தர் மற்றும் மணிரத்னத்தால் துணிச்சலாக களமிறக்கப்பட்டவர் தான் ஏ.ஆர்.ரகுமான். அவர்கள் இருவரும் தன்மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்று வெறித்தனமாக உழைத்த ரகுமான் முதல் படத்திலேயே அதற்கான பரிசாக தேசிய விருதையும் வென்று அசத்தினார்.
ரோஜாவில் தொடங்கிய ஏ.ஆர்.ரகுமானின் இசை ராஜாங்கம், 30 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இந்திய சினிமாவிலேயே மிகவும் பிசியான இசையமைப்பாளர் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் தான். அவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களையும் தன்னுடைய லைன் அப்பில் வைத்திருக்கிறார் ரகுமான்.
undefined
இதையும் படியுங்கள்... ஜஸ்ட் மிஸ்! ஒரு ஓட்டில் தேசிய விருதை ரகுமானிடம் பறிகொடுத்த இளையராஜா
ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கும் பாடல்களில் பல்வேறு புதுமைகளை புகுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அப்படி, இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு பாடலை கம்போஸ் செய்த முதல் இசையமைப்பாளரும் ஏ.ஆர்.ரகுமான் தான். ரோஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் மணிரத்னமும் ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து பணியாற்றிய படம் திருடா திருடா. இப்படத்தில் பிரசாந்த் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் தான் இசைக்கருவிகளே இல்லாமல் ஒரு பாடலை கம்போஸ் செய்திருந்தார் ரகுமான்.
திருடா திருடா படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வேறலெவல் ஹிட் அடித்தாலும், அதில் வரும் ராசாத்தி என்கிற பாடலுக்கு தனி மவுசு உண்டு. ஷாகுல் ஹமீதின் குரல் நம் இதயத்தை வருடச் செய்யும் அளவுக்கு உணர்வுப்பூர்வமான பாடலாக அது இருக்கும். இந்த பாடலுக்கு இசைக் கருவிகள் எதுவும் பயன்படுத்தாமல், அகபெல்லா எனப்படும் கோரஸை மட்டும் வைத்து அப்பாடலை கம்போஸ் செய்திருப்பார் ரகுமான். இந்தியாவிலேயே இசைக்கருவிகளே இல்லாமல் கம்போஸ் செய்யப்பட்ட முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அட்ட பிளாப் படத்தையும் தூக்கி நிறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான் இசை; பாட்டுக்காகவே கொண்டாடப்பட்ட படங்கள் எது?