நடிகர் சிவகார்த்திகேயன், 'அமரன்' படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ள எஸ் கே 25 திரைப்படத்திற்கு, தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளார். இது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்து, முன்னணி நடிகராக மாறி இருப்பவர் சிவகார்த்திகேயன். நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்ட சிவகார்த்திகேயன், தற்போது தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் அக்டோபர் 31ஆம் தேதி, தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'அமரன்'. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தை, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் உலக நாயகன் கமலஹாசன் தயாரித்திருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு 400 கோடி வசூல் நாயகன் என்கிற பெயரையும் பெற்று தந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக நடித்திருந்த நிலையில், சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராகுல் போஸ், புவன் அரோரா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஷாலினியை போல்; திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்?
கடந்த வாரம் ஓடிடியில் வெளியான இந்த படத்திற்கு, ஓடிடி தரப்பு ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். மேலும் அமரன் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு, அதிகம் வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் என்கிற சாதனையையும், இந்திய அளவில் 9-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. அமரன் பட சாதனைகள் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கோரா இயக்கத்தில் தன்னுடைய 25 ஆவது படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார். இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயன்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.
ரூ.150 முதல் ரூ.250 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த படத்தில், சிவகார்த்திகேயனை தவிர ஜெயம் ரவி, அதர்வா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையோடு துவங்கிய நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் இப்படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் த்ரிஷாவின் கை பிடித்த அஜித்! வைரலாகும் 'விடாமுயற்சி ஸ்டில்ஸ்!
அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ.30 கோடி மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் 25 ஆவது படத்தில் நடிக்க ரூ.50 கோடி சம்பளமாக பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமரன் படத்தின் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய சம்பளத்தை ரூ.20 கோடி அதிகமாக உயர்த்தி உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும், சூர்யாவை வைத்து சுதா கொங்கரா இயக்க இருந்த 'புறநானூறு' திரைப்படத்தின் கதையில்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது என்பது கூடுதல் சிறப்பு.