Latest Videos

Moon Walk: 25 வருடங்களுக்கு பின்னர் AR ரஹ்மான் - பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு வித்தியாசமான டைட்டில்!

By manimegalai aFirst Published Jun 19, 2024, 3:01 PM IST
Highlights

இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்திற்கு மூன் வாக் என பெயரிடப்பட்டுள்ளது.
 

Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில்  இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், 'மூன் வாக்' எனும் அட்டகாசமான தலைப்பை,  Behindwoods நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR ரஹ்மான், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா இணைகிறார்கள் என்ற நிலையில்,  இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலும் 'மூன் வாக்' தலைப்பு அமைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இனிமேல் தான் ட்விஸ்ட்டே இருக்கு! 'பாக்கியலட்சுமி' நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவால் எகிறும் எதிர்பார்ப்பு!

ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள். 

இசைப்புயல் AR ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைவரையும் மயக்கும் வகையில் தயாராகி வருகிறது. இப்படத்தின் ஆல்பம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படம் மிகவும் சிறப்பாக உருவாகி வருகிறது.  அனைத்து பொழுது போக்கு அம்சங்களுடன்,  நகைச்சுவை கலந்த அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

80 வயதிலும் ஃபிட்னஸில் கலக்கும் விஜயகுமார்! அப்பாவின் வெறித்தன ஒர்க்கவுட்டை வெளிப்படுத்திய மகள் அனிதா!

Behindwoods வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இயக்கி வருகிறார்.மனோஜ் NS, திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் தயாரித்து வருகின்றனர். அனூப் VS ஒளிப்பதிவிற்கும், ஷானு முரளிதரன் தயாரிப்பு வடிவமைப்பிற்கும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங்கிற்கும் பொறுப்பு ஏற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!