
பாலிவுட் பிரபலங்களான அனுஷ்கா ரஞ்சனும் ஆதித்யா சீலும் 4 வருட காதலுக்கு பின்னர் தற்போது திருமணம் கோலம் கொண்டுள்ளனர். மும்பையில் நேற்று நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற நட்சத்திர விழாவில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முன்னதாக நடைபெற்ற திருமண சங்கீத் நிகழ்ச்சியில் அலியா பட், வாணி கபூர், பூமி பெட்னேகர், கிறிஸ்டல் டிசோசா, சுசானே கான் என அனைவரும் சங்கீத் உள்ளிட்ட திருமண கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ராகேஷ் ரோஷன், அலி கோனி மற்றும் ஜாஸ்மின் பாசின், மனைவியுடன் மதுர் பண்டார்கர், பூனம் தில்லான் மற்றும் வருண் தவானின் அம்மா லாலி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமணத்தில் ஆலியாவின் சகோதரி ஷாஹீன் பட்டும் கலந்து கொண்டார்.
இதற்கிடையே ஆதித்யாவும் அனுஷ்காவும் காதல் ஜோடியாக நடிக்கும் இசை வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். மேரி ஜிந்தகி மே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் சமீர் அஞ்சான் எழுத்தில், அமித் மிஸ்ரா குரலில் வெளியாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை அனுஷ்கா பாலிவுட் படங்களான Wedding Pulav, Batti Gul Meter Chalu உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆதித்யா கடைசியாக கியாரா அத்வானி நடித்த இந்தூ கி ஜவானி நடிதிரைப்படத்தில் நடித்துள்ளார். இவர்களின் திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.