
பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான இந்த படத்தை பாலாஜி காபா தயாரித்திருந்தார். சாம் சிஎஸ் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்திருந்தது.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமான 'யாருக்கும் அஞ்சேல்' படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார். பிந்து மாதவி, தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தபடத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையே இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். இது குறித்த போஸ்டரைப் பகிர்ந்த சந்தீப் கிஷன், ''உண்மையிலேயே மக்கள் செல்வனாக இருந்ததற்கு நன்றி விஜய் சேதுபதி அண்ணா'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதிக பொருட்செலவில், தேசிய அளவில் பல மொழிகளில் இந்த படம் உருவாவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரிப்பாக உருவாகும் 'மைக்கேல்' படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது.
இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் இயக்குனர் கௌதம்மேனன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Take pleasure in welcoming my Guru & Ace Director @MenonGautham as the Antagonist in the world of@MichaelTheFilm
Looking forward to learning from you once again sir ❤️@VijaySethuOffl
A @jeranjit Film
@SVCLLP @KaranCoffl
మైఖేల్ மைக்கேல் माइकल ಮೈಕೆಲ್ മൈക്കിൾ #Michael pic.twitter.com/NWEQ4VTcuF
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.