Vijay 66 | தெறி பட பாணியில் உருவாகிறதா விஜய் 66 ? தந்தை-மகள் அன்பை சொல்லும் கதையை உருவாக்கும் வம்சி?

By Kanmani PFirst Published Nov 22, 2021, 11:58 AM IST
Highlights

அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தை போன்று தந்தை - மகளின் பாசத்தை சொல்லும் கதைக்களமாக விஜய் 66 பட கதை உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

தளபதி பட அப்டேட் என்றாலே ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான். அடுத்தடுத்து அதிரடி படங்களை கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தி வரும் விஜய் 'மாஸ்டர்' படத்தில் வாத்தியாராக தோன்றி மாஸ் காட்டி இருந்தார். கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் மண்டேலா இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டேவும், மூன்று வில்லன்களில் ஒருவராக செல்வராகவனும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரூத் 'பீஸ்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார்.  ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி வரும் இந்த படம் 75 சதவீத படப்பிடிப்பை முடித்துள்ளது. இதன் ரிலீஸ் தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதற்கிடையே விஜய் தனது 66 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்த்துள்ளார். இந்த புதிய படத்தை இயக்கவுள்ள வம்சி பைடிபல்லி தமிழுக்கு புதிய  இயக்குனர் இல்லை. இவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு நாகார்சூனா, கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படம் முழுக்க முழுக்க எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாகவே இருந்தது. அதோடு வம்சி இயக்கத்தில் வெளியாகியா பிருந்தாவனம், மகரிஷி உள்ளிட்ட படங்கள் எமோஷன் சார்ந்த கதைக்களத்தையே கொண்டிருந்தன. அதன்படி விஜயின் 66 திரைப்படமும் கமர்ஷியல் படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

விஜய் 66 குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் வம்சி;  இந்த புதிய படம் அரசியல் மற்றும் ஆக்ஷன் படம் கிடையாதென்றும், மனித உறவுகள்  உணர்வுகள் சார்ந்த கதைக்களமே தனது பலம், இது நிச்சயம் விஜய் 66 -ல் இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் முதல் வெளிவரும் என கூறியுள்ள வம்சி விஜயின் ரசிகர்களை மனதில் கொண்டே கதை எழுதியுள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் வெளியான 'தெறி' படத்தை போன்று தந்தை - மகளின் பாசத்தை சொல்லும் கதைக்களமாக விஜய் 66 பட கதை உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதோடு தெறியில்'' நடிகை மீனாவின் மகள் அறிமுகமானதை போல இதில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

click me!