
பாலாபிஷேகம் செய்தபோது கட் அவுட்டிலிருந்து தவறி விழுந்த ஒருவர், படம் பார்க்க பணம் தராததால் தந்தையைக் கொன்ற இன்னொருவரைத்தொடர்ந்து பாண்டிச்சேரியில் பாதிப்படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மேலும் ஒருவர் இறந்ததைத்தொடர்ந்து விஸ்வாசத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று ஆகியிருக்கிறது.
என்னதான் அஜீத் ரசிகர் மன்றங்களைக் கலைத்திருந்தாலும் தமிழகம் முழுக்க வெற்கொண்ட ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். இம்முறை வழக்கத்துக்கு மாறாக விஸ்வாசம்’ படத்தால் மூன்று உயிர்ப்பலிகள் நேர்ந்திருப்பது பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே இரண்டு விபரீதங்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், விஸ்வாசம் ஓடும் தியேட்டர் ஒன்றில் மீண்டும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. பாண்டிச்சேரியில் உள்ள தியேட்டர் ஒன்றில் கோவையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் நண்பர்களுடன் விஸ்வபார்க்கசசென்றுள்ளார். இடைவேளை வரை படத்தை ஜாலியாக விசில் அடித்துப் பார்த்த ராம்குமார், திடீரென வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.
சரி போதையில்தான் மயங்கிவிட்டார். படம் முடிந்ததும் எழுப்பிக்கொள்ளலாம் என்று நினைத்த நண்பர்கள் தொடர்ந்து உற்சாகமாகப் படம் பார்க்க ஆரம்பித்தனர். அடுத்து படம் முடிந்தபோது நண்பர் ராம்குமாரை அவர்கள் எழுப்ப முயல, அவர் சலனமற்றுக் காணப்பட்டார். இதையடுத்து பதறிய நண்பர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது டாக்டர்கள் ராம்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ராம்குமாரையும் சேர்த்து விஸ்வாசம் படத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை மூன்று பேர் என்று ஆகியும் அஜீத் ஒரு இரங்கல் அறிக்கை கூட தராமல் இருப்பது நியாயமா என்று பலரும் குரல் எழுப்பிவருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.