பிரபல காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம்! அறுவை சிகிச்சைக்கு பின் தற்போதைய நிலை!

Published : Jan 17, 2019, 11:01 AM ISTUpdated : Jan 17, 2019, 11:02 AM IST
பிரபல காமெடி நடிகருக்கு ஏற்பட்ட சோகம்! அறுவை சிகிச்சைக்கு பின்  தற்போதைய நிலை!

சுருக்கம்

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பிரேமானந்தா, இதய அருவை சிகிச்சைக்கு பின் தற்போது எப்படி உள்ளார் என்கிற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.  

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பிரம்மாநந்தா, இதய அருவை சிகிச்சைக்கு பின் தற்போது எப்படி உள்ளார் என்கிற தகவலை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழில்,  கில்லி, மொழி, வானம், தானா சேர்ந்த கூட்டம், போன்ற பல தமிழ் படங்களில், காமெடி வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தெலுங்கு முன்னணி காமெடி நடிகர் பிரேமானந்தா.

62 வயதாகும் இவருக்கு,  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக, இவருடைய குடும்பத்தினர் இவரை மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிரம்மாநந்தாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என கூறினர்.

இதைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ஏசியன் ஹாட் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் இவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் இவர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியுள்ளது, பிரம்மாநந்தா உடல் நிலை தற்போது நன்கு தேறி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளன.

பிரம்மாநந்தா, பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனையை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தி கோட் படம் பிடிக்கும்-பாகிஸ்தான் ரசிகை உருக்கம்: உலகளவில் டிரெண்டாகும் விஜய்யின் ஜன நாயகன்!
கழுத்தைபிடித்து வீட்டைவிட்டு துரத்தப்பட்ட தங்கமயில்-அதிர்ச்சியில் ஆடிப்போன பாக்கியம், மாணிக்கம்!