
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது படக்குழுவை சேர்ந்த சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்றே வந்த போதும், ரத்த அழுத்தமாறுபாடு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் பங்கேற்றார். அங்கு தொடர்ந்து நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த், சென்னை திரும்பினார். அதன் பின்னர் சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய டப்பிங் பணிகளை சமீபத்தில் தொடங்கினார்.
அவரைத் தொடர்ந்து நடிகர் சதீஷ், மீனா ஆகியோர் டப்பிங் பணிகளை நிறைவு செய்ததாக புகைப்படங்கள் வெளியாகின. தற்போது படக்குழு லக்னோவில் உள்ளது. அங்கு விறுவிறுப்பான இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அண்ணாத்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு நடிகரை படக்குழு அறிவித்துள்ளது. விஜய் உடன் தலைவா, வேலாயுதம் மற்றும் கார்த்தியின் தீரன் படங்களில் நடித்த அபிமன்யு சிங் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.