
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான ‘ஃபால்’ (Fall) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: உதவி செய்ய ஆளில்லாமல் நடுரோட்டில் தவித்த நபர்.! மீண்டும் மெக்கானிக்காக மாறிய அஜித்.! ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு
திவ்யா என்ற இளம் பெண்ணிற்கு தான் தற்கொலைக்கு முயன்ற 24 மணி நேர சம்பவங்கள் மட்டுமே ஞாபகத்தில் உள்ளது. யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையில் இருக்கும் அவளுக்கு, உண்மையில் என்ன நடந்தது என்பதையும், தன் நண்பர்கள் உறவினர்கள் பற்றிய உண்மைகளையும் தேடுகிறாள். மேலும், அவளின் மறந்து போன நினைவுகளிலிருந்து முழுமையான நிகழ்வுகளை கண்டுபிடிக்க முயல்கிறாள். இந்த கதையை யாரும் எதிர்பாராத திருப்புமுனைகளுடன் விறுவிறுப்பு, மற்றும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் எடுத்துள்ளார் இயக்குனர் சித்தார்த் ராமசாமி.
மேலும் செய்திகள்: அதற்குள் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் சீரியல்..! ரசிகர்களை அப்செட் ஆக்கிய தகவல்..!
‘ஃபால்’ (Fall) தொடரை இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்க, கிஷன் C செழியன் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘ஃபால்’ தொடர் ITV company நிறுவனமான Armoza Formats விநியோகம் செய்த, Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, மைக்கேல் ஆலன் எழுத்தில், விருது பெற்ற "வெர்டிஜ்" எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.