அமெரிக்காவில் பிறந்ததற்கே நான் வெட்கப்படுகிறேன்... ஹாலிவுட்டின் பிரபல நடிகை கொந்தளிப்பு!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 25, 2021, 8:45 PM IST
Highlights

ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சாமானியர்களின் நிலைமை இனி என்னவாகும் என்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார். 

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கைவசம் சென்றது தொடர்பாக அமெரிக்கா மீது பல்வேறு விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆப்கான் மக்களை தாலிபான்கள் கையில் ஒப்படைத்துவிட்டு, அமெரிக்க ராணுவ பின்வாசல் வழியாக தப்பி வந்துவிட்டதாக கடுமையாக சாடுபவர்கள் ஏராளம். அப்படியிருக்க அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜுலி தன் சொந்த நாட்டின் மீது கடும் விமர்சனங்களை தைரியமாக முன்வைத்துள்ளார். 

டைம் இதழில் அவர் பேசியுள்ளது தலையங்கமாக வெளியாகியுள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க தலையிடுவதை நிறுத்திக் கொண்டது. இதனால் தாலிபான்களின் கைகள் ஓங்கி வெறும் 10 தினங்களில் நாட்டையே பிடித்துவிட்டனர். இந்த நிலைக்கு ஆப்கானிஸ்தானை ஏன் தள்ள வேண்டும் என்று ஏஞ்சலினா ஜுலி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இன்னும் கடுமையாக அமெரிக்க குடிமகளாக நான் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் சாமானியர்களின் நிலைமை இனி என்னவாகும் என்பதை நாம் கவனிக்க தவறிவிட்டோம் என்றும் கூறியுள்ளார். சுற்றுச்சூழல் தொடர்பான பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் பங்காற்றி வருகிறார். எனவே ஏஞ்சலினா ஜுலியின் இந்த கண்டனம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 
 

click me!