
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்கை துவங்குவதற்கான ஆயத்த பணிகள் தற்போது சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் புரோமோ ஷூட் எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இதனை உறுதி படுத்தும் விதமாக கமல்ஹாசன் செம்ம ஸ்டைலிஷாக ஷூட்டில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், பல பிரபலங்கள் காமெடி நடிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள் என பலர் போட்டி போட்டு கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள். அதே நேரத்தில் சில சர்ச்சை பிரபலங்களையும் தேடி பிடித்து நிகழ்ச்சியில் இறங்கி, 'பிக்பாஸ்' மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு அதிகரிக்க செய்கிறது விஜய் டிவி.
இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மட்டும் இன்றி பிரபலங்கள் மத்தியிலும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பிக்பாஸ் 1,2,3,4 என அடுத்தடுத்து சீசன்களுமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் 5 ஆவது சீசன் துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் இருந்தாலும், இதுவரை ஒருவர் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து உறுதி செய்யவில்லை.
மேலும் கடந்த மாதம் முதலே பூந்தமல்லியில் பிக்பாஸ் செட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வந்தாக கூறப்பட்ட நிலையில், நேற்றைய தினம் பிக்பாஸ் புரோமோ ஷூட்டில், கமல்ஹாசன் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. எனவே அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த புரோமோ வெளியாகும் என்றும், அடுத்த மாத இறுதியில் நிகழ்ச்சி துவங்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் புரோமோ ஷூட்டில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில், செம்ம ஸ்டைலிஷாக கோட்டு - சூட்டு போட்டு கெத்து காட்டியுள்ளார் கமல்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.