இயக்குனரோடு எடுத்த போட்டோவை வெளியிட்டு 'மாஸ்டர்' படத்தின் முக்கிய அப்டேட் கூறிய ஆண்ட்ரியா!

Published : Jan 22, 2020, 03:50 PM IST
இயக்குனரோடு எடுத்த போட்டோவை வெளியிட்டு 'மாஸ்டர்' படத்தின் முக்கிய அப்டேட் கூறிய ஆண்ட்ரியா!

சுருக்கம்

தளபதி விஜய் நடிப்பில், மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'மாஸ்டர்' . இந்த படத்தை, 'மாநகரம்', 'கைதி' ஆகிய படங்களை, இயக்கி கோலிவுட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  

தளபதி விஜய் நடிப்பில், மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'மாஸ்டர்' . இந்த படத்தை, 'மாநகரம்', 'கைதி' ஆகிய படங்களை, இயக்கி கோலிவுட் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த, இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின், படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக டெல்லி, கர்நாடகா, சென்னை என பல்வேறு இடங்களின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, கௌரி கிஷன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து இப்படத்தில் நடித்து வருகிறது.

ஏற்கனவே மாளவிகா மோகன் மற்றும் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக சென்றது அனைவரும் அறிந்தது தான். 

இதை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை அவரே வெளியிட்டுள்ளார். மேலும், சிறந்த இயக்குனருடன் பணியாற்றி வருவதாகவும், 2020 ஆண்டின் மிக பிரமாண்டமான படமாக 'மாஸ்டர்' இருக்கும் என்றும், பிப்ரவரி மாதத்தோடு படப்பிடிப்பு முடிவடைய உள்ளதையும் ஆண்ட்ரியா படத்தின் சுட சுட அப்டேட் பற்றி தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!