ஊரடங்கு நேரத்தில்... நடிகை ரோஜாவின் பாதங்களுக்கு பூ போட்டு வரவேற்பு! நோட்டீஸ் அனுப்பிய கோர்ட்!

By manimegalai aFirst Published May 6, 2020, 5:09 PM IST
Highlights

நடிகையும், ஆந்திர மாநில நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, கடந்த மாதம் அவரது தொகுதியில் தண்ணீர், குழாய் திறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் அவர் இருபுறமும் மக்கள் மலர் தூவ, சினிமா பாணியில் வந்து மாலை மரியாதையோடு, தண்ணீர் குழாய் திறந்தார்.
 

நடிகையும், ஆந்திர மாநில நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, கடந்த மாதம் அவரது தொகுதியில் தண்ணீர், குழாய் திறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் அவர் இருபுறமும் மக்கள் மலர் தூவ, சினிமா பாணியில் வந்து மாலை மரியாதையோடு, தண்ணீர் குழாய் திறந்தார்.

ஊரடங்கு நேரத்தில், மக்கள் படும் அவதியை கண்டு கொள்ளாமல், இதுபோன்று அவர் செயல்பட்டது விமர்சனங்களுக்கு ஆளானது. இந்நிலையில் இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், நடிகை ரோஜாவிற்கு நீதி மன்றம் தற்போது  விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா.  மேலும் தற்போது ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். அதோடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணித் தலைவியாகவும் செயல்பட்டு வருகிறார்.

மேலும் செய்திகள்: ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் நன்றி மறக்காத செந்தில்..! ட்விட்டரில் இணைந்த 24 மணி நேரத்தில் இவ்வளவு ஃபாலோவர்ஸ்!
 

மேலும் தன்  பகுதி மக்கள், ஊரடங்கு நேரத்தில் அவதிப்பட கூடாது என்பதற்காக தினமும் உணவு, கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக, கிருமி நாசினி போன்றவற்றை இவரே களத்தில்  இறங்கி அடித்தார். இவரின் இந்த செயல்களுக்கு ஒரு பக்கம் ஆதரவு கிடைத்தாலும், மற்றொரு புறம், தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக இப்படி செய்கிறார் என்கிற கண்டனங்களும் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில அவருடைய பகுதியில் குடிநீர் குழாய் ஒன்றை ரோஜா திறந்து வைத்தார்.  மேலும்  கட்சியினரின் ஏற்பாட்டின்படி ரோஜா காரில் வந்து இறங்கி நடந்து வரும் வழி நெடுக்க, ஒரு புறம் ஆண்கள் மற்றொரு புறம் பெண்கள் நின்று கொண்டு பூக்களை வாரி இறைத்தனர். இதனை ஏற்று கொண்டு நடிகை ரோஜாவும் அன்னநடை போட்டு வந்து, மாலை மரியாதையை ஏற்று கொண்டு, தண்ணீர் குழாயை திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்:
 

இந்த வீடியோ வெளியாக, பலரும் தொடந்து தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதை எதிர்த்து, கிஷோர் என்ற வழக்கறிஞர் ஆந்திர ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையை நேற்று நீதிமன்றம், கானொலி மூலம் நடத்தியது. ரோஜாவுக்கு மலர் தூவி வரவேற்பு கொடுக்கும் வீடியோவையும் பார்த்தார் நீதிபதி.

மேலும் செய்திகள்: சிக்னல் கொடுத்தேனா? தவறாக நடக்க முயன்ற காமெடி நடிகரை கேரவனுக்கு அழைத்து சென்று தலை குனிய வைத்த பிரகதி!
 

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ரோஜா உட்பட  4 சட்டசபை உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. 

click me!