
விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும்.15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும் டிடி, சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அதே போல் இவருக்கு, வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வெளியிடங்களில் தன்னுடைய ரசிகர்கள் பேச வந்தால், பிரபலம் என அலட்டி கொள்ளாமல், அவர்களுடன் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவர்களின் செல்பிக்கு ஸ்டில் கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துவார். இவரின் இந்த எளிமையே இவரை ரசிகர்கள் மத்தியில் நிலைக்க வைத்துள்ளது.
சமூக வலைத்தளத்தில், படு ஆக்டிவாக இருக்கும் டிடி தற்போது கொரோனா தொற்று காரணமாக, போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக வெளியில் எங்கும் ஷூட்டிங் செல்லாமல் வீட்டிலேயே உள்ளார். கலகலப்பாக அங்கும் இங்கும் ஓயாமல் பிஸியாக இயங்கி கொண்டிருந்த இவருக்கு வீட்டில் இருக்க போர் அடிப்பதால் அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் தன்னுடைய ரசிகர்களிடம் லைவ் சாட் செய்கிறார்.
அப்போது ரசிகர்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் சற்றும் முகம் கோணாமல் கியூட்டாக பதில் அளித்து வருகிறார். இவரை பற்றி இவரிடம் கேட்பவர்களை விட மற்ற பிரபலங்களை பற்றி டிடி-யிடம் கேட்கும் ரசிகர் பலர். அந்த வகையில் ஒருவர், நடிகை நயன்தாரா பற்றி கூறுங்கள் என கேட்க, அதற்கு அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அவங்க மனசுல எதையும் வாசிக்க மாட்டாங்க. குறிப்பாக நயன்தாராவிற்கு கோபம் வந்தால், முதலில் போனை எடுத்து, யார் மேல் கோபம் உள்ளதோ அவருக்கு போன் செய்து அவரிடம் தன்னுடைய மனதில் உள்ளது பற்றி பேசி விடுவார். இது மிகவும் சிறந்த குணமாக நான் பார்க்கிறேன். மனதில் ஒன்றை வைத்து கொண்டு பேசுவதற்கு, இது பல மடங்கு நல்ல விஷயம் என டிடி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.