
உலகளவில் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் இருக்கும் முகேஷ் அம்பானி அவர்களுடைய இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மகள் ராதிகா மெர்ச்சண்ட் அவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்று நாட்கள் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் நேற்று முதல் துவங்கி உள்ளது.
பாலிவுட் உலகமே இப்பொழுது ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்றுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. அதேபோல கோலிவுட் பிரபலங்கள் பலரும் ஆனந்த் அம்பானியின் திருமண வைபக நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உலக புகழ் பெற்ற பாடகி ரிஹான்னாவிற்கு சுமார் 50 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு ஆனந்த் அம்பானியின் திருமண விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தொடர்ச்சியாக அவருடைய நடனங்களும் பாடல்களும் கடந்த இரண்டு நாட்களாக ஆனந்த் அம்பானியின் திருமண வைபக நிகழ்வுகளில் அரங்கேறி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாலிவுட் உலகில் பிரபலமான நடிகை ஜான்வி கபூர் அவர்களும், பாடகி ரிஹானா அவர்களும் ஒன்றாக இணைந்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
சைலண்டாக மகனை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்த தனுஷ்... கோலிவுட்டில் அறிமுகமாகும் யாத்ரா..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.