
எமி ஜாக்சன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹாலிவுட்டில் 'சூப்பர்கேர்ள்' என்கிற சீரியல் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த சீரியல் வாய்ப்பு காரணமாக பெரும்பாலும் திரைப்படங்கள் நடிப்பதை தவிர்த்து வருகிறார் எமி. எனினும் நல்ல கதை மற்றும் முன்னணி ஹீரோக்கள் படம் என்றால் உடனே ஓகே சொல்லி விடுகிறார்.
'காலா' படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள, 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் லண்டனை சேர்ந்த நடிகை என்பதால், எப்போதும் வித்தியாசமான ஆடைகளை அணிந்து, மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களை குஷி படுத்துவார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
அப்படியிருக்க சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்த புகைப்படம் நெட்டில் கசிந்து வைரலாக பரவி பலரது விமர்சனத்தை பெற்றது.
இதை தொடர்ந்து தான் ஒரு பெண்ணுக்கு, மனைவியாக வாழ்கிறேன் என கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் பலர் சமூக வலைத்தளத்தில், எமி அந்த பெண்ணுடன் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறினர். மேலும் எமியுடன் இருக்கும் அந்த பெண் யார் என்றும் அனைவர் மத்தியிலும் ஒரு கேள்வி எழுந்தது.
தற்போது அந்த பெண்ணை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. எமி ஜாக்சனுடன் இருக்கும் அந்த பெண்ணின் பெயர் நீலம் கில், 23 வயதான இவர் ஒரு மாடல். இவர் நிறைய பேஷன் ஷோக்களில் பங்குபெற்றுள்ளார். அதோடு நிறைய ஹாட் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களையும் திணற வைத்துள்ளார்.
இவரின் ஹாட் புகைப்படம் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.