
காலா திரைப்படம் இரு தினங்களுக்கு முன் கோலாகலமாக ரிலீசாகி, வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த படம் ஹிட்டா? ஃப்ளாப்பா? என பட்டி மன்றமே வைக்கும் அளவிற்கு, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
பல்வேறு தடைகளை தாண்டி காலா திரைப்படம் ரிலீசாகி இருந்தாலும், வழக்கமான ரஜினி படத்திற்கான வரவேற்பு காலாவிற்கு இல்லை. தூத்துக்குடி பிரச்சனையில் ரஜினி, மக்கள் எதிர்ப்பை சம்பாதித்தது தான் இதற்கெல்லாம் காரணம். அதே சமயம் ரஞ்சித் இந்த திரைப்படத்தை பாராட்டும் படியாக எடுத்திருந்தார். ஆனாலும் ரஜினி ரசிகர்கள் பொதுவாக எதிர்பார்க்கும் சில மசாலாக்கள் காலாவில் மிஸ்ஸிங்.
இந்த காரணங்கள் எல்லாம் சேர்ந்து, காலா திரைப்படத்தின் வசூல் இரண்டாவது நாளிலேயே குறைந்திரிருப்பதாக, சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இப்போது காலா திரைப்படத்தின் வசூல் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல் ஒன்று, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வந்திருக்கிறது. இதனை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
கர்நாடகாவில் காலா ரிலீஸ் செய்ய உதவிய கர்நாடக போலீசாருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தங்கள் நலம் விரும்பிகளுக்கும், நன்றி தெரிவித்திருக்கும் தனுஷ், காலா திரைப்படம் ஒரு ”பிளாக் பஸ்டர்” என பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.