ஆபாச உடையில் ராஷ்மிகா; வைரலாகும் வீடியோ! கடும் நடவடிக்கை எடுக்க சொன்ன அமிதாப்பச்சன்!!

By Ganesh A  |  First Published Nov 6, 2023, 1:22 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் உலா வருவது போல் வீடியோ வைரலாகியதை பார்த்து கடுப்பான பிரபல நடிகர் அதிரடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.


தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு நல்ல நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறதோ, அதேவேளையில் அதில் எக்கச்சக்கமான ஆபத்துக்களும் இருப்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. சமீப காலமாக டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி. இதைப் பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை ஈஸியாக மற்றொருவரின் முகத்தை வைத்து மார்பிங் செய்துவிட முடியும்.

அண்மையில் கூட தமன்னாவின் காவாலா டான்ஸ் வீடியோவை, நடிகை சிம்ரன் ஆடியது போல் அப்படியே தத்ரூபமாக மாற்றி காட்டி இருந்தது இந்த டெக்னாலஜி. அப்போது அந்த வீடியோவுக்கு பலரும் தத்ரூபமாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர். நடிகை சிம்ரன் கூட அந்த வீடியோவை பார்த்து தான் நடனமாடியது போல் இருப்பதாக கூறி ஆச்சர்யத்தில் திளைத்துப் போனார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த டெக்னாலஜியின் ஆபத்தை உணர்த்தும் ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறி இருக்கிறது. அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது உண்மை என நினைத்து பலரும் வைரலாக்கினர். ஆனால் உண்மையில் இது AI தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவாகும்.

இந்த வீடியோ வைரலான நிலையில், இதனை பார்த்து ஷாக் ஆன பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், இதனை மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகை ராஷ்மிகாவும், அமிதாப் பச்சனும் குட் பாய் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

yes this is a strong case for legal https://t.co/wHJl7PSYPN

— Amitabh Bachchan (@SrBachchan)

இதையும் படியுங்கள்... முத்துப்பாண்டிக்கு மனைவியாக ரத்னா போட்ட கண்டிஷன்.. சண்முகம் செய்யப் போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்

click me!