நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாக பரவலாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் அவருக்கு அட்வைஸ் ஒன்றை கூறி உள்ளார்.
நடிகர் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உள்பட படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் விஜய்யிடம் அவரது அரசியல் எண்ட்ரி பற்றி தொகுப்பாளர்கள் சூசகமாக கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதன்படி 2026 என தொகுப்பாளர்கள் கேட்டதற்கு 2025-க்கு அடுத்த வருஷம் என நக்கலாக பதிலளித்தார் விஜய். பின்னர் இன்னும் கொஞ்சம் யோசிங்க என தொகுப்பாளர்கள் சொல்ல, விஜய்யோ 2026-ல கால்பந்து உலகக்கோப்பை வருது என சொல்லி மீண்டும் அவர்களுக்கு பல்பு கொடுத்தார். பின்னர் இன்னும் சீரியஸான பதில் வரலயே என தொகுப்பாளர்கள் கேட்டவுடன் கப்பு முக்கியம் பிகிலு என ரசிகர்களை பார்த்து தன் அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசி இருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
விஜய்யின் இந்த பேச்சு வைரலான நிலையில், அவரின் அரசியல் வருகை குறித்து இயக்குனர் வெற்றிமாறனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது : “அரசியலுக்கு வர வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார். அவர் அரசியலுக்கு வரட்டும், அவர்மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக அவர் கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது எல்லாருக்குமே சவாலான ஒன்று தான். அதனை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களே அரசியலுக்கு வர விரும்புகிறார்கள் என இயக்குனர் வெற்றிமாறன் கூறி உள்ளார். அவரின் இந்த பேச்சு கவனம் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... "விஜய் சூப்பர் ஹீரோவாக நடிக்கணும்னு எனக்கு ஆசை" The Marvels - ப்ரோமோஷன் விழாவில் மனம்திறந்த நடிகை சமந்தா!