The Marvels : தி மார்வெல்ஸ் திரைப்படம் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி இந்திய ரசிகர்களுக்காக வெளியாக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தினுடைய பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் பிரபல இந்திய நடிகை சமந்தா.
தி மார்வெல்ஸ் பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகை சமந்தா இந்திய அவெஞ்சர்ஸ் கதை உருவானால் அதில் நிச்சயம் சூப்பர் ஹீரோக்களாக அல்லு அர்ஜுன், பிரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் உள்ளிட்டவர்கள் நடிக்க வேண்டும் என்று கூறினார். அதேபோல பிரபல நடிகர் தளபதி விஜய் அவர்களும் சூப்பர் ஹீரோவாக நடித்தால் கணக்கச்சிதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இது என் கனவு அவெஞ்சர்ஸ் டீம் ஆக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார், நியா தாகாஸ்ட என்பவருடைய இயக்கத்தில், வால் டிசைனிங் ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர் நிறுவனம் சுமார் 219 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்து இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறது. வழக்கம் போல மார்வெல் நிறுவனத்தின் கற்பனை கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
Samantha joined the Marvel Universe?pic.twitter.com/JjQD5smU1B
— Satyam Patel | 𝕏... (@SatyamInsights)இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கின்ற சமந்தாவின் ஆசையை அவர் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தளபதி விஜயுடன் இணைந்து கத்தி, தேறி மாற்றும் மெர்சல் ஆகிய மூன்று படங்களில் சமந்தா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பிறந்த சமந்தா, கெளதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தான் திரையுலகில் அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த நடிகையாக வலம்வரும் சமந்தா இறுதியாக குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் சென்னை ஸ்டோரீஸ் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D