அமீர் கொடுத்த காதல் பரிசால் கண்கலங்கிய பாவனி - வைரலாகும் ரொமாண்டிக் வீடியோ

Published : Jul 20, 2022, 10:13 AM IST
அமீர் கொடுத்த காதல் பரிசால் கண்கலங்கிய பாவனி - வைரலாகும் ரொமாண்டிக் வீடியோ

சுருக்கம்

Amir Pavani : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனி உடன் நடனமாடிய அமீர், அவருக்கு ஏராளமான காதல் பரிசுகளை கொடுத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்கிற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பாவனி. இந்த தொடரில் அவர் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியல் பெரிய அளவில் ஹிட் ஆகாவிட்டாலும், இவர் அடுத்ததாக பிரஜனுக்கு ஜோடியாக நடித்த சின்னத்தம்பி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

இந்த தொடரின் மூலம் நடிகை பாவனிக்கு ரசிகர் வட்டமும் பெரிதானது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னட சீரியல் நடிகர் பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாவனி. திருமணமான மூன்றே மாதத்தில் பிரதீப் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பாவனி சீரியலில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.

இதையும் படியுங்கள்... ரச்சிதா உடன் என்னதான் பிரச்சனை... விவாகரத்து செய்தது உண்மையா? - முதன்முறையாக மனம்திறந்த தினேஷ்

இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் பாவனி. அந்நிகழ்ச்சியில் காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார். முதலில் அபினய் உடனும், பின்னர் அமீர் உடனும் காதல் சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பாவனி, அதில் அமீர் உடன் இணைந்து நடனமாடி வருகிறார்.

சமீபத்தில் அமீரின் பிறந்தநாளன்று அவரை காதலிப்பதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது மிகவும் வைரல் ஆன நிலையில், தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர், பாவனிக்கு காதல் பரிசுகளை கொடுத்து கண்கலங்க வைத்துள்ளார். இதுகுறித்த புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் இறுதியில் அமீர் மோதிரம் ஒன்றையும் தருகிறார். ஆனால் அதனை பாவனி வாங்காமல் தயங்கி நிற்பது போன்ற காட்சிகளும் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

இதையும் படியுங்கள்... தளபதி 67-ல் டுவிஸ்ட் வைத்த லோகேஷ்... சமந்தா வில்லி ஆனதால் விஜய்க்கு ஜோடி யார் தெரியுமா?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!