அச்சசோ.. சமந்தாவை அலேக்காக தூக்கியா அக்‌ஷய் குமார்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ!

Published : Jul 19, 2022, 02:57 PM ISTUpdated : Jul 19, 2022, 03:08 PM IST
அச்சசோ.. சமந்தாவை அலேக்காக தூக்கியா அக்‌ஷய் குமார்.. வைரலாகும் டான்ஸ் வீடியோ இதோ!

சுருக்கம்

காஃபி வித் கரனில்  நடிகர் அக்ஷய் குமார், நடிகை சமந்தா பங்கேற்றுள்ளனர். இதில் பல கேள்விகளும் இருவரும் வெளிப்படையாக பதில் அளித்துள்ள நிலையில்  ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் மாஸ் டேன்ஸ் ஒன்றையும் ஆடியுள்ளனர்

தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வரும் நாயகி சமந்தா..தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் முன்னணியில் இருந்த இவர் கௌதம் மேனனின் தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேசவே மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்களின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இந்த படங்கள் சமந்தாவிற்கு போதுமான முகவரியை கொடுக்கவில்லை என்றாலும் இதை அடுத்து இவர் மறைந்த முரளியின் மகனான அதர்வாவுடன் பானா காத்தாடி என்னும் படத்தில் தோன்றியிருந்தார். ஆனால் ராஜமவுலி இயக்கிய ஈ படம் நல்ல முகவரியை கொடுத்தது. 

இயக்குனரின் ஹிட் லிஸ்டில் இடம் பிடித்த இந்த படத்தை ஈ நாயகனாக நடித்திருந்த இதன் மூலம்  சமந்தா, நானி இருவரும்  நல்ல  திருப்பு முனையை கண்டனர். தமிழில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் உள்ளிட்டோருடன் நாயகியாக நடித்து விட்டார் சமந்தா. இதற்கு இடையே தெலுங்கு ஹீரோவான நாக சைதன்யாவை கரம் பிடித்த இவர் இந்த ஆண்டு துவக்கத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.  பின்னர்  தனது கரியரிலும் உடையிலும் பல மாற்றங்களை செய்து வரும் சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு போட்ட ஆட்டம் உலகம் முழுதும் புகழ்பெற்ற நடிகையாக இவரை மாறிவிட்டார்.

முன்னணி வரிசையில் இடம் பிடித்த இவர் தனது உடலை மனதையும் இறுக வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். சமந்தா ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருவார். அதோடு சமீப காலமாக பாலிவுட்டுக்கு  ஏற்றவாறு உடை அணிந்து  பக்கா கிளாமர் கேர்ளாக மாறி விரட்டார் சமந்தா.

இதற்கிடையே சமீபத்தில் பிரபல இணையதள நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில்  தனது மணவாழ்க்கை முறிவு குறித்து சமந்தா பேசியிருந்தார். இந்நிலையில் மீண்டும் கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவின் மற்றும் ஒரு வீடியோ பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

காஃபி வித் கரணில்  நடிகர் அக்ஷய் குமார், நடிகை சமந்தா பங்கேற்றுள்ளனர். இதில் பல கேள்விகளும் இருவரும் வெளிப்படையாக பதில் அளித்துள்ள நிலையில்  ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் மாஸ் டேன்ஸ் ஒன்றையும் ஆடியுள்ளனர்.  வரும் ஜூலை மூன்றாம் தேதி ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் ப்ரோமோ வைரலாகி வருகிறது. 

முன்னதாக ஜான்விகபூர் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி வைரல் ஆகினர். முக்கியமாக சாரா அளிக்கான் தான் விஜய் தேவரகொண்ட உடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக வெளிப்படையாக தெரிவித்து பேசும் பொருளாக மாறிவிட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?