“மாஸ்டர்” படத்திற்கு இத்தனை கோடி விலையா?... விடப்பிடியாக ஆசைகாட்டும் அமேசான் ப்ரைம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 1, 2020, 8:19 PM IST
Highlights

சூரரைப் போற்று திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மீது தான் அமேசான் ப்ரைம் நிறுவனம் கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது. 

இந்நிலையில் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா பிரச்சனையால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. அதனால் “மாஸ்டர்” பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா பிரச்சனை என்று முடிவுக்கு வரும், எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற எந்த தகவலுமே தெரியாததால், இதுவரை “மாஸ்டர்” பட ரிலீஸ் தேதி குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

பொன்மகள் வந்தாள், பெண் குயின் என ஹீரோயின் கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான நிலையில், தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாரான சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் அக்டோபர் மாதம் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.  60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம்,  ரிலீஸுக்கு முன்னதாகவே ரூ. 100 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு தொகையான ரூ.60 கோடியை கொடுத்து அமேசான் பிரைம் ஏற்கனவே படத்தை வாங்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், சாட்டிலைட் உரிமை ரூ.20 கோடி, ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ரூ.20 கோடி என மொத்தம் 100 கோடி ரூபாயை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இதையும் படிங்க:  முதலில் அம்மா, அடுத்து அப்பா 10 நாளில் இருவரையும் பறிகொடுத்த பிக்பாஸ் பிரபலம்... உருக்கமான கண்ணீர் பதிவு...!

சூரரைப் போற்று திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் மீது தான் அமேசான் ப்ரைம் நிறுவனம் கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. “மாஸ்டர்” படத்தை அமேசான் நிறுவனம் ரூ.100 கோடி கொடுத்து வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. எவ்வளவு விலை கொடுத்தாவது மாஸ்டர் படத்தை வாங்க தயாராக இருப்பதாக தயாரிப்பாளரிடம் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஆனால் இந்த தகவலை சேவியர் பிரிட்டோ உறுதி செய்யவில்லை. அதனால் விஜய் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.

click me!