முதலில் அம்மா, அடுத்து அப்பா 10 நாளில் இருவரையும் பறிகொடுத்த பிக்பாஸ் பிரபலம்... உருக்கமான கண்ணீர் பதிவு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 01, 2020, 07:46 PM IST
முதலில் அம்மா, அடுத்து அப்பா 10 நாளில் இருவரையும் பறிகொடுத்த பிக்பாஸ் பிரபலம்... உருக்கமான கண்ணீர் பதிவு...!

சுருக்கம்

ஒரு சிறந்த கணவர்.. என் அம்மா கடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். 

இந்தி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானவர் கெளரவ் சோப்ரா. இவர் தமிழில் கூட அர்ஜுனின் ஒற்றன் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தி சீரியல்களில் நடித்து வரும் கெளரவ் சோப்ராவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பரிதாப நிலை, ஒட்டுமொத்த திரையுலகையும் அவருடைய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த சில வருடங்களாக கேன்சரால் போராடி வந்த அவரது அம்மா கடந்த 10  நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இந்த சோகத்தில் அவர் மீள்வதற்குள்ளாகவே அவரது அப்பாவும் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், ஸ்வதந்திர சோப்ரா என் நாயகன். என் உத்வேகம்... அவருடைய மில்லியனில் ஒரு பங்கு அளவிற்காகவது நான் வருவேனா என்பது சந்தேகமே?. சிறந்த மனிதர், சிறந்த மகன், சிறந்த சகோதரர், குடும்பத்தை எப்போதும் எல்லாவற்றிற்கும் மேலாக வைத்திருக்கும் ஒரு மனிதன். ஒரு சிறந்த தந்தை ... எல்லா தந்தையர்களும் அவரைப் போன்றவர்கள் அல்ல என்ற உண்மையைப் புரிந்துகொள்ள எனக்கு 25 ஆண்டுகள் பிடித்தன... அவர் சிறப்புடையவர் .. அவரது மகனாக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்ந்தேன். 

அன்பானவர்,  நான் சிறு வயதில் தெருவில் நடந்து சென்றாலோ, மார்க்கெட்டுக்கு சென்றாலோ என்னை பார்ப்பவர்கள் சோப்ரா சாபின் மகன் என்பார்கள். கடைக்காரர் என்னிடம் குறைவாகவே பணம் வாங்குவார். எங்கள் வீட்டை தேடியவருக்கு அடையாளம் காட்ட யாராவது துணைக்கு வந்து கேட்டில் நிற்பதை அடிக்கடி பார்க்க முடியும்.  "சோப்ரா சாபின் வீடு?"  என்று கூறினால் போதும் யாராக இருந்தாலும் அழைத்து வந்து எங்கள் வீட்டில் விடுவார்கள்.

ஒரு சிறந்த கணவர்.. என் அம்மா கடந்த நான்கு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். அந்த நான்கு ஆண்டும் அப்பா அவரை அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொண்டார். அம்மாவுடன் இருக்க எங்களை விட்டுச் சென்றுவிட்டார். அம்மா கடந்த 19ம் தேதி மரணம் அடைந்தார். அப்பா 29ம் தேதி உயிர் இழந்தார். 10 நாட்கள்...இருவரும் சென்றுவிட்டார்கள். அவர்களின் இழப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடம் என்றுமே அப்படியே இருக்கும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த அவருடைய ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
a

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்