
திருமணம், விவாகரத்து, என வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் கடந்து சென்ற போதிலும், அனைத்தையும் தாண்டி சினிமாவில் கவனம் செலுத்தி, முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருபவர் நடிகை அமலாபால்.
ஷூட்டிங் இல்லாத போது.. வித்தியாசமான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் 'ஆடை' படத்திற்கு கூட அமலாபால், அரைகுறை ஆடை அணிந்து நடித்த போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் தற்போது இவர் கைவசம் ஆறு படங்கள் இருக்கின்றன.
இந்நிலையில் கடற்கரை மணலில் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக, இதயம் வரைந்து அதன் உள்ளே 'சிநேகம்' என்று மலையாளத்தில் எழுதி, புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ஆனால் அந்த சிநேகம் யார் என்பது குறித்து எதுவும் கூறவில்லை. இதனால் அமலாபால் ரசிகர்கள்... யார் அந்த இரண்டாவது அதிர்ஷ்டசாலி என கேள்வி எழுப்பி வருகிறார்கள். என்ன பதில் கூறுவார் அமலா... என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.