தமிழ் படத்தில் ஹீரோ அவதாரம் எடுக்கும் 'லெஜெண்ட் சரவணன்'! முன்னணி நடிகையுடன் ஜோடி போடுகிறார்!

Published : Apr 20, 2019, 06:31 PM IST
தமிழ் படத்தில் ஹீரோ அவதாரம் எடுக்கும் 'லெஜெண்ட் சரவணன்'! முன்னணி நடிகையுடன் ஜோடி போடுகிறார்!

சுருக்கம்

சென்னையில் ஷாப்பிங் என்றதும், பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'சரவணா ஸ்டார்' என்கிற கடையின் பெயர் தான். வசதி படைத்தவர்கள், நடுத்தர வாதிகள், ஏழ்மையானவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல், அனைத்து பொருட்களும், சற்று விலை குறைவாகவே கிடைப்பது தான் இந்த கடையின் சிறப்பு.  

சென்னையில் ஷாப்பிங் என்றதும், பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது 'சரவணா ஸ்டார்' என்கிற கடையின் பெயர் தான். வசதி படைத்தவர்கள், நடுத்தர வாதிகள், ஏழ்மையானவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல், அனைத்து பொருட்களும், சற்று விலை குறைவாகவே கிடைப்பது தான் இந்த கடையின் சிறப்பு.

இதுவரை வசந்தன் கோ, லலிதா நகை கடை உரிமையாளராகள், அவர்களுடைய கடை விளம்பத்தாரத்தில் அவர்களே நடித்திருந்தாலும், பேச மட்டுமே செய்தனர். அவர்களிடம் இருந்து தன்னை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி கொண்டு, ஆட்டம், பாட்டம், டான்ஸ், மேக்அப், என  என்ட்ரி கொடுத்தவர் லெஜண்ட் நியூ  சரவணா ஸ்டோர்ஸ் தலைவர் லெஜண்ட் சரவணன்.

நடிகைகள், மற்றும் நடிகர்களை வைத்து விளம்பரம் எடுப்பதற்கு பதிலாக, இவரே விளம்பரங்களின் ஹீரோவாக மாறினார். இதனால் தற்போது இவருக்கே மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது.

ஆரம்பத்தில் இவருடைய நடிப்பு, டான்ஸ் ஆகியவை கேலி செய்யப்பட்டாலும், அவருடைய விடா முயற்சியால் தற்போது அவர் நடிக்கும் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களுக்கு பழகிவிட்டது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுடன்  இணைந்து அவர் நடிப்பதால் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

ஏற்கனவே இவர் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக வதந்தி பரவியது. பின் அந்த தகவல் உண்மையானது இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது, முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க உள்ள திரைப்படத்தில், 'லெஜெண்ட் சரவணன் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் முன்னணி நடிகை ஒருவர் இவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், விரைவில் இந்த படம் குறித்த தகவல் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு வழியாக இவரும் ஹீரோவாக மாறிவிட்டார்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!