நடிகை அமலா பால் தன்னுடைய காதல் கணவர் ஜெகத் தேசாயை கன்னத்தில் பளார் என அறைவிட்டபோது எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் அமலா பால். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. பிளெஸி இயக்கிய இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனின் மனைவியாக நடித்திருந்தார் அமலா பால். ஆடுஜீவிதம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பால் நடிப்பில் தற்போது லெவல் கிராஸ் என்கிற மலையாள படம் உருவாகி உள்ளது.
சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்த அமலா பால், கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து வந்த அமலா பால், அவரையே திருமணமும் செய்துகொண்டார். இவர்களது திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் தன்னுடைய கணவருடன் இணைந்து அமலா பால் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்கள் நன்கு வைரலாகி வருகிறது.
undefined
இதையும் படியுங்கள்... விஜய் டிவி டிஆர்பி-க்கு ஆப்பு வைக்க... மற்றுமொரு பாக்கியலட்சுமி சீரியலை களமிறக்கும் ஜீ தமிழ்
அந்த வகையில் தற்போது அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டிருக்கும் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து உள்ளது. அதில் அமலா பாலும் ஜெகத் தேசாயும் அருகருகே அமர்ந்திருக்க, அமலா பால் வீடியோவில் பேச முற்படும்போது அருகில் இருக்கும் ஜெகத் தேசாய் வாயால் ஊதி அமலாபாலின் முடியை கலைத்து விடுகிறார். ஓரிரு முறை இதை பொறுத்துக் கொண்ட அமலா பால், மறுபடியும் தன் கணவர் அப்படி செய்த உடன் கன்னத்தில் பளார் என அறைவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் செம்ம வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் உங்கள் இருவரின் செல்ல சண்டை அழகாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ ஹார்டின் எமோஜிகளை பறக்கவிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அமலா பால் - ஜெகத் தேசாய் ஜோடியின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... அப்போ அது சேறு இல்லையா? மஞ்சும்மல் பாய்ஸ் பட கிளைமாக்ஸில் பயன்படுத்தப்பட்ட ஓரியோ பிஸ்கட் - காரணம் என்ன?