
ஒரு நடிகையின் பழைய பிளாப் படமானது, புதிய பொலிவுடன் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறதென்றால் அந்த நடிகையின் மார்க்கெட் இப்போது செம்ம ச்ச்ச்சூடாய் இருக்கிறதென்று அர்த்தம். அந்த வகையில் லேட்டஸ்டாய் டிரெண்டிங்கிலிருக்கும் அமலாபாலின் பழைய சர்ச்சை படமான ‘சிந்து சமவெளி’யை தூசி தட்டி வெளியிடுகிறார்கள்.
அமலாபால் தமிழ் சினிமா ஃபீல்டுக்குள் நுழைந்தது சிந்துசமவெளி படத்தின் மூலமாகத்தான். உயிர், மிருகம் என சர்ச்சைக்குரிய செக்ஸ் சப்ஜெட்டுகளாக எடுத்து பிரபலமான இயக்குநர் சாமியின் படைப்பு இது. மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையிலான அந்தமாதிரி தொடர்பு பற்றிய கில்மா மூவி இது.
அதனால் 'A' சான்றிதழ் வாங்கிய படமிது. இந்தப்படம் வெளியாகி சர்ச்சையான சில நாட்களில்தான் ‘மைனா’வுக்காக அமலாவை புக் செய்தார் பிரபுசாலமன். அப்போது அவரை பலர் விமர்சித்தனர். ஆனால் மைனா பிரபுசாலமனையும், அமலாபாலையும் வேறு தளத்தில் கொண்டு நிறுத்தியது. அதன் பிறகு தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி, விக்ரமுடன் தெய்வதிருமகள், விஜய்யுடன் தலைவா அதன் பிறகு இயக்குநர் விஜய்யுடன் திருமணம் என பரபரவென நடித்துவிட்டு! மன்னிக்கவும் வாழ்ந்துவிட்டு டைவர்ஸும் வாங்கினார் அமலா.
கடந்த இரண்டு வருடங்களாக ஸ்லிம் பியூட்டியாக அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி இன்ஸ்டாகிராமில் போட்டு ரசிகர்களின் இதயதுடிப்பை எகிற வைப்பதும், ஏதாவது சர்ச்சையில் சிக்கி பின் மற்றவர்களுக்கு கிளாஸ் எடுப்பதுமாக போய்க் கொண்டிருக்கிறது அமலாவின் வாழ்க்கை.
இது போக பாபிசிம்ஹாவுடன் செம ஹாட் ‘திருட்டுப்பயலே 2’, அர்விந்த்சாமியுடன் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என வரிசைகட்டி நிற்கிறது இவரது கிராஃப்.
இந்நிலையில்தான் அமலாபாலின் பழைய சிந்துசமவெளி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் முடிவில் இறங்கியிருக்கிறது அதை தயாரித்த நிறுவனம். விரைவில் ’அமலாபாலின் சிந்து சமவெளி’ என்று விளம்பரம் கொடுத்து ரசிகர்களை ரெடி செய்ய துவங்கிவிட்டனர். சமீபகாலமாய் எதற்கும் துணிந்த அமலாவிடமிருந்து இதுவரையில் எந்த எதிர்ப்புமில்லை என்கிறார்கள்.
இதுபோதாதென்று இதில் இன்னொரு ஹைலைட்டும் இருக்கிறது. இந்த படத்தை வழங்குபவர் மைக்கேல் ராயப்பன். ஒரு காலத்தில் கேப்டன் கட்சியில் கோலோச்சிய இவர், சமீபத்தில் சிம்புவின் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ எனும் அட்டர் பிளாப் படத்தை தயாரித்து நொந்து போனவர்.
சிம்புவிடம் விட்டதை அமலாபாலிடம் பிடிப்பார் போலிருக்கிறது!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.