
திரைப்படமும், குறும்படமும் கலந்து பிரசவித்திருக்கும் குழந்தையான ‘வெப்சீரிஸ்’ தமிழ் ரசிகர்களை ஆட்டிப்படைக்க துவங்கியிருக்கிறது. இதில் சமீபத்தில் வெளியான ‘லட்சுமி’ எனும் படம் பொது வெளியில் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கதைப்படி...குடும்பத்துக்காக வீட்டிலும், அலுவலகத்திலும் வேலை பார்த்து கொட்டுகிறாள் லட்சுமி. கணவன் அவளை செக்ஸுக்காக மட்டுமே மெஷின் போல் அனுபவிக்கிறான், அவளை ஆராதிப்பதேயில்லை. மேலும் வெளியிலும் அவனுக்கு பெண் தொடர்பிருக்கிறது. இப்படியொரு வாழ்க்கையால் வெறுத்துப் போயிருப்பவள் மின்சார ரயிலில் தன்னை தொடர்ந்து கவனித்து ஆராதிக்கும் ஒருவனோடு ஓர் இரவை ரசனையாக கழித்து, தன்னையும் தருகிறாள். பின் அந்த புதியவனை மறப்பதற்காக மறுநாளில் இருந்து மின்சார ரயிலை தவிர்த்து, பேருந்தில் அலுவலகம் செல்கிறாள்.
இந்த படத்தை பார்த்துவிட்டு ’ஓர் சாமான்ய தமிழ் பெண்ணை எப்படி இப்படி கேவலமாய் சித்திரிக்கலாம்?’ என ஒரு தரப்பும், ’சபாஷ், சரியான புரட்சிப் பெண்ணடி நீ!’ என இன்னொரு தரப்பும் ஏட்டிக்கு போட்டியாய் விமர்சித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த வெப்சீரிஸ் படத்தில் லட்சுமியாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா சந்திரமவுலி இந்த படத்தை பற்றி தனது எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில் ...”சமூகத்தை திருத்தும் நோக்கிலெல்லாம் அந்தப்படம் எடுக்கப்படவில்லை. சாதாரண ஒரு பெண்ணின் கதை அவ்வளவே! லட்சுமியை நல்ல பெண்ணாக பார்த்தாள் அவள் நல்லவள், அதே நேரம் ஒரு சில காட்சிகளை வைத்துக் கொண்டு கெட்ட பெண்ணாக அவளை பார்த்தாள் அவள் கெட்டவளாகவே தெரிவாள். அது பார்ப்பவரின் கோணத்தை பொருத்தது.” என்று செமத்தியாக எஸ்கேப் ஆகியிருப்பவர், “இந்த படத்துக்கு 10க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான விருதுகள் கிடைத்திருக்கின்றன.
அதற்கெல்லாம் மேலாக இயக்குநர் கவுதம் மேனன் சாரின் பாராட்டு எனக்கு அமைந்திருக்கிறது. நேரில் நிறையபேர் பாராட்டினார்கள். ஆனால் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் வசவுகள் நாகரிகமில்லாமல் வந்து விழுகின்றன.
எங்கள் படைப்பில் குறையிருந்தால் கூறட்டும் திருத்திக் கொள்கிறோம். ஆனால் அதை நாகரிகமாக கூறாமல் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் கூறுபவர்களுக்கு செவிசாய்க்க தயாரில்லை.” என்கிறார் லட்சுமி.
சர்தான்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.