தீபிகா படுகோன் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் ரூ.5 கோடியா?  

 
Published : Nov 18, 2017, 02:13 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
தீபிகா படுகோன் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் ரூ.5 கோடியா?  

சுருக்கம்

theepika padukone head rate is 5 crores

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடித்துள்ள மிக பிரமாண்டமான திரைப்படம் 'பத்மாவதி'  இந்தப் படத்தின் ட்ரைலர் சபீபத்தில் வெளியாகி மிகப் பெரிய சாதனை படைத்தது. மேலும் விரைவில் இந்தப் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

'பத்மாவதி' ராணியின் வழக்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் பத்மாவதி ராணியை தவறாக சித்திரித்து இயக்குனர் படம் இயக்கியுள்ளதாகக் கூறி பலர் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என கூறிவருகின்றனர்.

மேலும் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த அமைப்பு ஒன்று, நடிகை தீபிகா படுகோன் ஒரு இந்தியராக இருந்துகொண்டு 'பத்மாவதி' ராணியை அவமதிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறி, அவருடைய தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி சன்மானமாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ள்ளது.

இந்தப் படத்திற்கு இப்படி ஏகப்பட்ட மிரட்டல்கள், மற்றும் எதிர்ப்புகள் தொடர்ந்து வரும் நிலையிலும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்தே தீருவோம் என படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!