குட்டை உடைத்த அமலா பால்... வெளியானது திருமண போட்டோஸில் மறைந்திருக்கும் ரகசியம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Mar 21, 2020, 11:33 AM ISTUpdated : Mar 21, 2020, 11:41 AM IST
குட்டை உடைத்த அமலா பால்... வெளியானது திருமண போட்டோஸில் மறைந்திருக்கும் ரகசியம்...!

சுருக்கம்

இந்நிலையில் நேற்று பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. 

“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக  2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

விவாகரத்திற்கு பிறகு படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்த ஏ.எல்.விஜய், கடந்த ஆண்டு ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அமலா பால் தொடர்ந்து படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் நேற்று பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. 

இதையும் படிங்க: “ராஜா ராணி” ஜோடிக்கு குட்டி இளவரசி வந்தாச்சு... மகிழ்ச்சியில் ஆல்யா - சஞ்சீவ்...!

அந்த புகைப்படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நொடியில் இருந்தே வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்தது. இதையடுத்து சில மணி நேரங்களிலேயே அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் இருந்து டெலிட் செய்யப்பட்டது. இந்நிலையில் அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அவரது மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். 

“அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி. இன்று அமலா பாலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டவை. அதை ஏன் பவ்னிந்தர் வெளியிட்டார் என்பது தெரியவில்லை. திருமணம் என்பது அமலா பாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும், அமலா பாலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?