தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யமாட்டேன்! பிரபல நடிகர் சொன்ன காரணம்!

Published : Mar 23, 2019, 08:19 PM IST
தமிழிசைக்கு மட்டும் பிரச்சாரம் செய்யமாட்டேன்! பிரபல நடிகர் சொன்ன காரணம்!

சுருக்கம்

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அவர்களுடைய வேட்பாளர்களை அறிவித்து, அவர்களை வெற்றி பெற வைப்பதற்கான தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.  

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியும் அவர்களுடைய வேட்பாளர்களை அறிவித்து, அவர்களை வெற்றி பெற வைப்பதற்கான தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

திமுக கட்சி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் களமிறங்கியுள்ள, கனிமொழியை எதிர்த்து, பாஜக மாநில  தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட உள்ளார். 

இதனால் தமிழிசையை வெற்றி பெற வைக்க பாஜகவினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த பிரபல நடிகரும் இயக்குனருமான விசு, யாருக்கு பிரச்சாரம் செய்தாலும் தமிழிசைக்கு மட்டும் செய்ய மாட்டேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும் போது... கண்டிப்பாக பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். ஆனால் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மட்டும் செய்ய மாட்டேன்.  காரணம் இந்த கட்சியில்  உறுப்பினராக மாறி மூன்று ஆண்டுகள் ஆகிறது.  இது வரை ஒரு முறை கூட இந்த கட்சியின் மாநிலத் தலைவரான அவரை சந்திக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

படத்துக்காக அல்ல, பணத்துக்கும், புகழுக்கும் வேலை செய்கிறார்கள்; அனிருத் பற்றி தமன் ஆதங்கம்!
ரெஜினா கசாண்ட்ரா: முஸ்லிமாக பிறந்து கிறிஸ்தவ பெயர் வைத்தது ஏன்?