இளம் இயக்குனர் விபத்தில் மரணம்! திரையுலகில் பரபரப்பு!

Published : Mar 23, 2019, 07:57 PM ISTUpdated : Mar 23, 2019, 08:00 PM IST
இளம் இயக்குனர் விபத்தில் மரணம்! திரையுலகில் பரபரப்பு!

சுருக்கம்

நாளுக்கு நாள் சாலை விபத்துகள், அதிகம் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டுருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், கவனக்குறைவு, குடித்து விட்டு வண்டி ஓட்டுவது, உள்ளிட்ட பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.  

நாளுக்கு நாள் சாலை விபத்துகள், அதிகம் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டுருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், கவனக்குறைவு, குடித்து விட்டு வண்டி ஓட்டுவது, உள்ளிட்ட பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்நிலையில் துளு மொழி படங்களை இயக்கிய 30  வயதே ஆகும் இளம் இயக்குனர் ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஹாரிஸ் ஹூதுவால், என்கிற இளம் இயக்குனர் ஓட்டி வந்த கார் நிலை தடுமாறி,  தெற்கு கர்நாடகாவை அடுத்த மூடபிடரி பகுதி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் இயக்குனர் ஹாரிஸ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

விபத்து குறித்து அறிந்ததும் உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் இவர் ஷீரடிக்கு சென்று கொண்டிருந்ததாகவும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!