இதுவரை எந்த தெலுங்கு நடிகரும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறாத நிலையில், முதல் முறையாக அல்லு அர்ஜுனுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளதை தெலுங்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கொண்டாடி வருகிறார்கள்.
இந்திய திரையுலகினரை பெருமை படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை 5 மணியளவில், 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்காததது மிகப்பெரிய ஏமாற்றம் என்றாலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகை சேர்ந்தவர்கள் அதிகப்படியான விருதுகளை பெற்றுள்ளனர்.
அந்த வகையில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 'புஷ்பா தி ரைஸ்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதன் மூலம் தெலுங்கில் முதல் முறையாக தேசிய விருதை பெற்ற முதல் நடிகர் என்கிற சாதனையை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார். இதனை அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் கூறி கொண்டாடி வருகிறார்கள்.
அதே போல், அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமாரை கட்டி தழுவி... மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருணத்தின் வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும், அல்லு அர்ஜுனுக்கு தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு பாரபச்சம்? அதிகபாசமாக 6 தேசிய விருதுகளை அள்ளிய 'RRR' திரைப்படம்!
'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் டிசம்பர் 17, 2021 அன்று வெளியானது. இதில் புஷ்பராஜ் வேடத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இது செம்மர கடத்தல் பின்னணியில் ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகி இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.