இயக்குனராக சாதித்த மாதவன்... முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்தல் - ராக்கெட்ரிக்கு கிடைத்த அங்கீகாரம்

By Ganesh A  |  First Published Aug 24, 2023, 6:56 PM IST

Madhavan Rocketry Movie Won National Award : மாதவன் இயக்கி, தயாரித்து நடித்த ராக்கெட்ரி திரைப்படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றுள்ளதால், மாதவனும் படக்குழுவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை நடிகர் மாதவனின் ராக்கெட்ரி படத்துக்கு அறிவித்துள்ளனர். மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ராக்கெட்ரி. கடந்தாண்டு ஜூலை மாதம் திரைக்கு வந்த இப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

இப்படத்தை இயக்கியதோடு, நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடித்தும் இருந்தார். இதில் மாதவனுடன் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்திய நடிகர் மாதவனுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

Latest Videos

நடிகர் மாதவன் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும் நடிகராக அவர் இதுவரை ஒருமுறை கூட தேசிய விருது வாங்கியதில்லை. ஆனால் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே அவர் தேசிய விருது வென்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுஙகள்... விருதுகளை குவித்த தெலுங்கு படங்கள்; வெறுங்கையோடு திரும்பிய தமிழ் படங்கள்- யார் யாருக்கு விருது - முழு லிஸ்ட்

click me!