வேற லெவல்.. 'புஷ்பா தி ரூல்' படத்தில் இருந்து... அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான கிலிப்ஸி வீடியோ!

By manimegalai a  |  First Published Apr 7, 2023, 6:38 PM IST

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'புஷ்பா' படக்குழு #WhereisPushpa என்ற ஹேஷ்டேக்கின் கீழ் 'Pushpa 2: The Rule' படத்தின் தனித்துவமான கிலிம்ஸி வீடியோவை வெளியிட்டுள்ளது.
 


கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், ஒரு பான்-இந்தியா திரைப்படம் என்றால் என்ன என்பதை நிரூபிக்கும் விதமாக, அனைத்து எல்லைகளையும் கடந்து,  அல்லு அர்ஜுனை உலகளாவிய நாயகனாக நிலை நிறுத்தியது. இதை தொடர்ந்து தற்போது , ’புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் ரசிகர்களை வசீகரிக்க கார்த்திருக்கிறது.

இந்நிலையில் #WhereIsPushpa? என்ற ஹேஷ்டேக்குடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான கான்செப்ட் வீடியோவின் க்ளிம்ப்ஸை தொடர்ந்து  இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து இரண்டாம் பாகத்தின் மீது ஆர்வமும், அடுத்தடுத்த அப்டேட் தொடர்பான கோரிக்கையும் வந்த வண்ணமே உள்ளது, ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து இருக்கக்கூடிய நிலையில், ’புஷ்பா 2: தி ரூல்’ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

புஷ்பாவின் கதையும் எழுச்சியும் இரண்டாம் பாகத்தில் இன்னும் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தின் தனித்துவமான சித்தரிப்பு, உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் இயக்குநர் சுகுமார் திரையில் உருவாக்கிய காட்சிகள்  ஒரு புயலைப் போல மீண்டும் மக்களை திரையரங்குகளுக்கு எடுத்து வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ’புஷ்பா’ ஒரு திரைப்படம் என்பதைக் காட்டிலும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மூலம் மக்களின் குரலாக, ஒரு பாப்-கலாச்சாரமாக மாறியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் முதல் பிரபலங்கள், அரசியல்வாதிகள் வரை அனைவரும் மேடைகளில் ’புஷ்பா’ ரெஃபரன்சை பயன்படுத்தியுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.

’புஷ்பா’ படத்தின் தொடர்ச்சியான ’புஷ்பா 2: தி ரூல்’ எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் கற்பனையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தற்போது வெளியாகியுள்ள கிலிம்ஸி வீடியோ அமைந்துள்ளது.  இதன் மூலம் இப்படம் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் கவனிக்கத்தக்க ஒரு படமாக மாறும் என்பது தெளிவாகத் தெரிகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் ’புஷ்பா: தி ரூல்’ படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!