ஜூலியை வரவழைத்து அசிங்கப்படுத்தி அனுப்பும் மீடியாக்கள்...!

 
Published : Oct 10, 2017, 05:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ஜூலியை வரவழைத்து அசிங்கப்படுத்தி அனுப்பும் மீடியாக்கள்...!

சுருக்கம்

all media scolding julie

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் வந்து சில மணி நேரம் அரசியல் தலைவர்கள் பற்றி அசிங்கமாக கத்திச் சென்றவர் ஜூலி.

இதைத் தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடினார். தற்போது இதில் கலந்து கொண்ட தனது அனுபவம்  குறித்து அனைத்து ஊடகங்களுக்கும் கூறி வருகிறார் ஜூலி.

இதில் பல ஊடகங்கள் ஜூலியை அழைத்து அவரை அசிங்கப்படுத்துவது போல் பல கேள்விகளைக் கேட்டு வருகிறன்றன. அப்படித்தான்  அண்மையில் நித்தியானந்தா வேடம் போட்டுகொண்டு ஒரு தொகுப்பாளர் இவரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.

இதில் ஜூலியை அறிமுகப்படுத்தும் போதே இவர் பிரபலமா அல்லது பிராபலமா என.... வாங்க! பேசிப் பார்க்கலாம் எனக் கூறினார்.  ஜூலி எப்படி இருக்கீங்க என்று கேட்க, அவர் நான் நன்றாக இருக்கிறேன் என்கிறார். நீங்க நல்லா இருக்கறதா பொய் சொல்றீங்க.. என்று, கழுவி ஊற்றினார்.

அதன் பின், பிக்பாஸில் உள்ளே இருந்த ஜூலிக்கும் வெளியில் உள்ள ஜூலிக்கும் என்ன வித்தியாசம் என தொகுப்பாளர் அவரிடம் கேட்க, அதற்கு ஜூலி, நீங்கள் தான் சொல்ல வேண்டும் எனச் சொல்ல... நான் சொன்னா அசிங்க அசிங்கமா சொல்லுவேன் என கூறுகிறார். பின் ஜூலியே தன்னைப் பற்றிக் கூறி, மக்கள் தன்னை போலி, பொய்க்காரி, நாடகக்காரி என பல பெயர்கள் வைத்து அழைத்து வருவதாக சிரித்துக்கொண்டே கூறுகிறார்.

ஜூலிக்கு அட்வைஸ் செய்தால் பிடிக்குமா என தொகுப்பாளர் கேட்க, அதற்கு, தனக்கு அட்வைஸ் செய்தால் மிகவும் பிடிக்கும்; நான் அமைதியாக அமர்ந்து அடுத்தவர் கொடுக்கும் அட்வைஸ்களைக் கேட்பேன் என ஜூலி சொல்கிறார். அதற்கு, “பின் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் சொன்னதையும் கேட்கவில்லை?” எனக் கேட்டதற்கு எதையும் சொல்லும் விதத்தில் சொன்னால் தான் புரிந்து கொள்ள முடியும்; அப்படி யாரும்  எனக்கு அட்வைஸ் கொடுக்க வில்லை எனக் கூறினார். 

ஆகா.. இப்படி ஜூலியை அழைத்து அசிங்கப்படுத்தியே நிகழ்ச்சியை ஓட்டிவிடலாம் போலிருக்கிறதே! என்று சிலர் அதற்கு கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!
திறப்பு விழாவிற்கு போகாதீங்க; ரேணுகாவை எச்சரிக்கும் ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது டுவிஸ்ட்!