மகளின் ஆன்லைன் கேமிங்கால் நடந்த அதிர்ச்சி; அக்ஷய் குமார் ஓபன் டாக்!

Published : Oct 03, 2025, 09:38 PM IST
Akshay Kumar Talk About His Daughter Nitara Bhatia online Gaming

சுருக்கம்

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சைபர் கிரைம் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டும் வகையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், தனது 13 வயது மகள் வீடியோ கேம் விளையாடும்போது நடந்த ஒரு அதிர்ச்சிகரமான நிஜ வாழ்க்கை சம்பவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

மும்பையில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற சைபர் விழிப்புணர்வு மாதம் 2025 தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமர் கலந்து கொண்டு பேசினார். அதில், சில மாதங்களுக்கு முன்பு, தனது மகள் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரிடம் தன்னை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டதாக நடிகர் நினைவு கூர்ந்தார்.

இச்சம்பவம் குறித்து அக்‌ஷய் குமார் மேலும் கூறியிருப்பதாவது: "சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை உங்கள் அனைவரிடமும் சொல்ல விரும்புகிறேன். என் மகள் ஒரு வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தாள், சில வீடியோ கேம்களை நீங்கள் யாருடனாவது விளையாடலாம். நீங்கள் முன்பின் தெரியாத ஒருவருடன் விளையாடுகிறீர்கள்," என்று அக்ஷய் கூறினார்.

காந்தாரா புயலிலும் அசராம அடிக்கும் பவன் கல்யாணின் ஓஜி; கலெக்‌ஷன் இத்தன கோடியா?

"நீங்கள் விளையாடும்போது, சில நேரங்களில் அங்கிருந்து ஒரு செய்தி வரும்... பிறகு ஒரு செய்தி வந்தது, நீங்கள் ஆணா அல்லது பெண்ணா? அதற்கு அவள் பெண் என்று பதிலளித்தாள். பின்னர் அவர் ஒரு செய்தியை அனுப்பினார். உங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்ப முடியுமா? அது என் மகள். அவள் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு என் மனைவியிடம் சொன்னாள். இப்படித்தான் விஷயங்கள் தொடங்குகின்றன. இதுவும் சைபர் கிரைமின் ஒரு பகுதி...

நமது மகாராஷ்டிரா மாநிலத்தில், ஏழாம், எட்டாம், ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் ஒவ்வொரு வாரமும் சைபர் பீரியட் என்ற ஒரு வகுப்பு இருக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். அதில் குழந்தைகளுக்கு இதுபற்றி விளக்கப்பட வேண்டும். தெருக்களில் நடக்கும் குற்றங்களை விட இந்தக் குற்றம் பெரியதாகி வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்தக் குற்றத்தைத் தடுப்பது மிகவும் முக்கியம்...," என்று அக்ஷய் குமார் வெளிப்படுத்தினார். வேகமாக மாறிவரும் டிஜிட்டல் உலகில் மாணவர்கள் (7-10 ஆம் வகுப்பு) பாதுகாப்பாகவும், தகவலறிந்தவர்களாகவும் இருக்க, சைபர் கல்வியை வாராந்திர பாடமாக சேர்க்க வேண்டும் என்று அக்‌ஷய் குமார் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மூதேவி.. கையில விலங்கு போட்டு கூட்டி வரணும்ங்க அவனை..! விஜயை ஒருமையில் பேசும் நக்கீரன் கோபால்!

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்