
Actress Rukmini Vasanth Letter : காந்தாரா சாப்டர் 1 வெளியாகி, இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. படத்திற்கு வெளியான அனைத்து மொழிகளிலும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1, படத்தில் ராணி கனகவதி பாத்திரத்தில் ஜொலித்த நடிகை ருக்மிணி வசந்த் இதுகுறித்து உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
'காந்தாரா 1' குழுவில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் சாகசம். இந்தப் படம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. நான் நிறைய கற்றுக்கொண்டேன், அதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு நன்றி. உங்கள் கடின உழைப்பு படத்தை சிறப்பாக்கியது. என்னை நம்பியதற்கும், வளர உதவியதற்கும் நன்றி. ஹோம்பாளே குழுவினர் மற்றும் திரைமறைவில் உள்ள அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பிரகதிக்கு சிறப்பு நன்றி. என் புதிய தோற்றத்திற்கும், பாராட்டுக்களுக்கும் நீங்கள்தான் காரணம். கலை இயக்குநர் பங்களானுக்கும் நன்றி. சரின் இசைக்கு 'ரோமாஞ்சனம்' என்பதைத் தவிர வேறு வார்த்தை இல்லை. நடன மற்றும் சண்டை இயக்குநர்களுக்கும், குல்ஷன் மற்றும் ஜெயராம் சாருடன் நடித்ததற்கும் மகிழ்ச்சி. நன்றி.
கேட்டரிங் குழுவின் சுவையான உணவுக்கும், என் மேக்கப் குழுவின் ஆதரவிற்கும் நன்றி. வெயில், மழையிலும் என்னை ஜொலிக்க வைத்தீர்கள். உங்கள் ஆதரவிற்கு நன்றி மட்டும் போதாது. கன்னட சினிமா ரசிகர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. திரையரங்கில் உங்களைச் சந்திக்கக் காத்திருக்கிறேன் என்று ருக்மிணி வசந்த் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நடிகை ருக்மிணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதி உடன் ஏஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியாகி உள்ள 3வது படம் காந்தாரா சாப்டர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.