வெவ்வேறு கிளைமாக்ஸ்! ஒரே நாளில் 2 வெர்ஷனாக ரிலீஸ் ஆகும் படம் பற்றி தெரியுமா?

Published : Jun 03, 2025, 11:35 AM IST
not only akshay kumar housefull 5 but these movies also have multiple ending

சுருக்கம்

ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் கிளைமாக்ஸை மாற்றுவார்கள், ஆனால் தற்போது ரிலீஸ் ஆகும்போதே 2 வெவ்வேறு கிளைமாக்ஸ் உடன் ரிலீஸ் ஆகும் படம் பற்றி பார்க்கலாம்.

Housefull 5 Movie has 2 Climax : அக்‌ஷய் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஹவுஸ்ஃபுல் 5. இது ஒரு நகைச்சுவை த்ரில்லர் படம். இப்படத்தை தருண் மன்சுகானி இயக்கி உள்ளார். நாடியட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சாஜித் நாடியட்வாலா, வர்தா நாடியட்வாலா மற்றும் ஃபிரோஸ் கான் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

ஹவுஸ்ஃபுல் 5 ஒரு மல்டி-ஸ்டார் படம். இதில் சுமார் 24 நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் அக்‌ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன் ஆகியோருடன் நர்கிஸ் ஃபக்ரி, சோனம் பஜ்வா, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், சஞ்சய் தத், நாணா படேகர், ஃபர்தீன் கான், ஷ்ரேயாஸ் தல்படே, டினோ மோரியா, ஜானி லெவர், சித்ராங்கதா சிங், சங்கி பாண்டே, சௌந்தர்யா சர்மா மற்றும் நிக்கிதின் தீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

375 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் முழு படப்பிடிப்பும் ஒரு கப்பலில் நடந்தது, சுமார் 40 நாட்களில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

இரண்டு கிளைமாக்ஸ் உடன் ரிலீஸ் ஆகும் ஹவுஸ்ஃபுல் 5

இந்நிலையில், இப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஹவுஸ்ஃபுல் 5A மற்றும் ஹவுஸ்ஃபுல் 5B என இரண்டு வெர்ஷனாக வெளியாக உள்ளதாம். இந்த இரண்டு வெர்ஷனும் வெவ்வேறு கிளைமாக்ஸ் உடன் கூடியதாம். இந்த இரண்டு வெர்ஷனுமே ஒரே நாளில் தான் ரிலீஸ் ஆக உள்ளது. ஒரே நாளில் இரண்டு கிளைமாக்ஸ் உடன் ரிலீஸ் ஆகும் முதல் படம் இதுதான். இதற்கு முன்னர் படம் சரியாக போகவில்லை என்றால் கிளைமாக்ஸை மாற்றுவார்கள். ஆனால் ரிலீஸ் ஆகும்போதே இரண்டு கிளைமாக்ஸ் உடன் ரிலீஸ் ஆகும் படம் இதுதான்.

ஹவுஸ்ஃபுல் 5 டிக்கெட் புக்கிங்

ஹவுஸ்ஃபுல் 5 படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. படத்தின் டிக்கெட் விற்பனையும் வேகமாக நடைபெற்று வருகிறது. முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் படம் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது முந்தைய நான்கு பாகங்களிலிருந்தும் வேறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. படம் 2 பதிப்புகளில் வெளியிடப்பட உள்ளதால் அதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது வரை ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படத்திற்கு முன்பதிவு மூலம் 11714 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இப்படத்துக்கு போட்டியாக கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் இந்தியில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?