
Coolie Overseas Rights : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி'. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், நாகார்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ந் தேதி சுதந்திர தின விடுமுறையில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் கூலி திரைப்படம் பற்றிய மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி கூலி படத்திற்கு வெளிநாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நிறுவனம் ரூ.80 கோடிக்கு அப்படத்தின் ஓவர்சீஸ் உரிமையை வாங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சன் பிக்சர்ஸ் இன்னும் முடிவெடுக்கவில்லையாம். ஒரு தமிழ் படத்திற்கு வெளிநாட்டில் இருந்து இவ்வளவு பெரிய தொகை கிடைப்பது இதுவே முதல் முறை. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது 'கூலி' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'லியோ' படம் பெரும் வெற்றி பெற்றது. விஜய் நடித்த இப்படம் தமிழகத்தில் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. 'லியோ' படத்தின் இரண்டாம் பாகம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'லியோ' உலகம் முழுவதும் ரூ.620 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடி மீண்டும் இணைந்ததால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விஜய், த்ரிஷாவுடன் அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மனோபாலா, பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி, அபிராமி, இயா, வசந்தி, மாயா எஸ். கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, மடோனா செபாஸ்டியன், அனுராக் கஷ்யப், சச்சின் மணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
லியோ படத்தைவிட கூலி படம் அதிக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் படுஜோராக நடைபெற்று வருகிறது. முன்னதாக கூலி படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.120 கோடி கொடுத்து வாங்கி இருந்த நிலையில், தற்போது ஓவர்சீஸ் ரைட்ஸும் பெரும் தொகைக்கு டீலிங் நடைபெற்று வருவதால், ரிலீஸுக்கு முன்பே போட்ட பட்ஜெட்டை எடுத்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.