பலான சாமியாருடன் ரகஸிய தொடர்பா? சர்ச்சையில் மாட்டும் ‘2.0’ வில்லன்

Published : Nov 23, 2018, 09:52 AM ISTUpdated : Nov 23, 2018, 11:08 AM IST
பலான சாமியாருடன் ரகஸிய தொடர்பா? சர்ச்சையில் மாட்டும் ‘2.0’ வில்லன்

சுருக்கம்

‘2.0’ படத்தின் வில்லன் நடிகரும் இந்தியின் முன்னணி கதாநாயகனுமான அக்‌ஷய்குமாரருக்கு பலான சாமியார் ஒருவருடன் தொடபுள்ளதா என்பது குறித்து சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவினர் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.

‘2.0’ படத்தின் வில்லன் நடிகரும் இந்தியின் முன்னணி கதாநாயகனுமான அக்‌ஷய்குமாரருக்கு பலான சாமியார் ஒருவருடன் தொடபுள்ளதா என்பது குறித்து சி.பி.ஐ. புலனாய்வுப் பிரிவினர் துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேரா சச்சா சவுதா என்ற தனி மதத்தை உருவாக்கியவர் சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங். பலாத்கார வழக்கில் இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கு செல்வதற்கு முன்னதாக குர்மீத் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் சீக்கியர்களைப் போல உடை அணிந்திருந்தது அப்போது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கு எதிராக பஞ்சாப் பற்றி எரிந்தது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான விசாரணை கமிஷன் அறிக்கை அண்மையில் பஞ்சாப் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், முன்னாள் துணை முதல்வர் சுக்பீர்சிங் பாதலை அக்‌ஷய்குமார் தமது வீட்டுக்கு வரவழைத்து குர்மீத்தின் திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்பட்டிருந்தது. இதனால் அக்‌ஷய் குமாருக்கு பலான சாமியாரான குர்மீத்திடம் நெருங்கிய தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் வழுத்தது.

இதையடுத்து அக்‌ஷய்குமாரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது. இதனை ஏற்று நேற்று சண்டிகரில் சிறப்பு புலனாய்வு குழு முன்பாக ஆஜரான அக்‌ஷய்குமார் ஆஜாரானார். வரும் வியாழனறு அக்‌ஷய் குமார் ரஜினிக்கு இணையான பாத்திரத்தில் நடித்திருக்கும் 2.0 வெளியாக உள்ள நிலையில் இச்செய்தி பெரும் பரபரப்பாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!