கஜா புயலால் வீடு இழந்த 50 பேருக்கு தனி ஒருவனாய் வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்

Published : Nov 22, 2018, 03:05 PM ISTUpdated : Nov 22, 2018, 03:06 PM IST
கஜா புயலால் வீடு இழந்த 50 பேருக்கு தனி ஒருவனாய் வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்

சுருக்கம்

பிரச்சினை இருக்கும் இடங்களில்  பொதுச்சேவை மன்னன் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இல்லாவிட்டால் எப்படி? இதோ கஜா புயலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டித்தருவதாக அறிவித்திருக்கிறார் லாரன்ஸ்.

பிரச்சினை இருக்கும் இடங்களில்  பொதுச்சேவை மன்னன் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இல்லாவிட்டால் எப்படி? இதோ கஜா புயலில் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டித்தருவதாக அறிவித்திருக்கிறார் லாரன்ஸ்.

 ராகவா லாரன்ஸின் அறிவிப்பு...

கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புயலில் இடிந்துகிடக்கும் சில வீடுகளைப் பார்க்கும்போது நெஞ்சு வெடிக்கிறது.

அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்...அப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள் .நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.. ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்..

அன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்...உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்’ இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!
Jacqueline Fernandez : மாடர்ன் உடையில் மயக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!