
திமுக, அதிமுக என்ற இரு கழக ஆட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் இருபுறம் சாயாமல் மய்யமாக நிற்கிறோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார் கமல் ஹாசன். கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளை அள்ளியதால் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார். ஐ.ஜே.கே., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம். தமிழகம் முழுவதும் கமல், ராதிகா, சரத்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சாரத்தின் இறுதிநாளான இன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் தற்போது கோவை தெற்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக தன்னுடைய சித்தப்பா கமல்ஹாசனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் சுகாசினி. தற்போது கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனுடன் இணைந்து இருவரும் குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரித்துள்ளது பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: இடுப்பை காட்டி மயக்கிய ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுக்கும் தங்கை கீர்த்தி! மூச்சு முட்டவைத்த ஹாட் போட்டோஸ்!
கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசன், கையில் டார்ச் லைட்டுடன் கோவை தெற்கு தொகுதியில் வலம் வந்து சுஹாசினியும், சேர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். மேளதாளம் முழங்க வந்த இவர்கள், இசைக்கு ஏற்ற வாறு குத்தாட்டமும் போட்டனர். முதலில், அனைவர் மத்தியிலும் ஆட தயங்கிய அக்ஷரா பின்னர் வெறித்தனமாக செம்ம குத்து குத்தினார். கூடவே சுகாசினியும் கையில் டார்ச் லைட்டை வைத்து கொண்டு வாக்கு சேகரித்தவாறு டான்ஸ் ஆடினார். மேலும் இவர்களால் உச்சகமடைந்த பெண்கள் பலர் ஆட்டம் போட்டனர்.
மேலும் செய்திகள்: கீர்த்தி சுரேஷா இது? ஓவர் ஸ்லிம்... முகமெல்லாம் சுருங்கி போய் இப்படி ஆகிட்டாங்களே..! ரசிகர்கள் ஷாக்!
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.