
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, பின் நலம் அடைந்தார். இந்நிலையில் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் நடத்தி வரும் என்.ஜி.ஓ விற்கு, 1 கோடி நிதி வழங்கியுள்ள தகவலை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் கெளதம் கம்பீர்.
இந்தியாவையே மீண்டும் கதிகலங்க வைத்துள்ளது கொரோனா. கடந்த வருடம் மார்ச் மாதம் தன்னுடைய கொடூர முகத்தை இந்தியாவில் காட்டத் துவங்கிய கொரோனா பின்னர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின் சற்று குறைந்து. இதை தொடர்ந்து மீண்டும் கடந்த இரண்டு மாதங்களாக அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அடுத்தடுத்து பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுவதால் அதையும் சரி செய்ய முழுமூச்சுடன் செயல் பட்டு வருகிறது மத்திய அரசு.
இந்நிலையில் கொரோனா நிவாரண பணிக்காக, பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் நடத்தி வரும் என்.ஜி.ஓ விற்கு, நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். உரிய உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் போன்றவை இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு வழங்குவதற்காக ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய் குமாருக்கு பலப்பல நன்றிகள் என கெளதம் கம்பீர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்க்கு அக்ஷய் குமார் இந்த கடுமையான நேரத்தில், என்னால் முடிந்த உதவியை செய்ததற்கு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவின் முதல் அலை தலை தூக்கிய போது, பல கோடி நிவாரண நிதி வழங்கிய இவர், இரண்டாவது அலையிலும் உதவிகளை செய்து ரியல் ஹீரோ என நிரூபித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.